தென்னை மரத்தில் தூர் உளுத்து கொட்டுவது, குரும்பை உதிர்வது, காய் சிறுத்து கொட்டிவிடுவது போன்றவற்றிற்கு சிவப்பு கூன் வண்டு தான் காரணம்,
தடுக்க வழிகள்;
தென்னை மரத்தின் தூர் பகுதியில் சிவப்பு கூன்வண்டு சிறு சிறு துளைகள் துளைத்து அதன் வழியாக அனைத்தையும் களிமண் வைத்து பூசவேண்டும்,
பின்னர் மிச்ச முள்ள அந்த ஒருதுளையின் உள்ளே உள்ள அனைத்தையும் கத்தி வைத்து நன்றாக சுரண்டி எடுத்து விட்டு அதனுள் செல்போஸ் என்ற மாத்திரையை வாங்கி உள்ளே வைத்து அந்த ஓட்டையையும் களிமண் வைத்து பூசிவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளே உள்ள வண்டு செத்துவிடும்.
பின்பு மரத்தின் தூரைச் சுற்றி நல்ல தரமான வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோகிராம் வைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சிவப்பு கூன் வண்டு தாக்குதலில் இருந்து தென்னை மரத்தை கட்டுப்படுத்தலாம்.