தன்மரபு கோழி காலரா நோயை எவ்வாறு தடுப்பது? இதை வாசிங்க…

 |  First Published Jun 2, 2017, 12:47 PM IST
How to prevent chronic chicken cholera Read this



கோழி காலரா

1.. பாஸ்ச்சுரல்லா மல்டோசிடா என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் இந்த தொற்றுநோய் கோழி, வான்கோழி, வாத்து இனங்களை பெரிதும் பாதித்து பெருத்த பொருட்சேதத்தை ஏற்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

2.. இந்நோய் 12 வாரத்திற்கு மேற்பட்ட கோழிகளை அதிகமாக பாதிக்கிறது.

3.. இந்நோய் மற்ற உடல் பாகங்களை பாதித்தாலும் மூச்சுக்குழல் பாதிப்பு கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

4. இந்நுண்ணுயிரி சாதாரணமாக நாய், பூனை, மற்றும் இதர கொரி விலங்குகள் வாயில் காணப்படுகிறது. இந்நுண்ணுயிரி பண்ணைக்குள் நுழைவதில் இந்த விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

5.. மேலும் மாசுபட்ட குடிநீர், தீவணம் மற்றும் மாசு பட்ட முட்டை தட்டு மூலம் பண்ணைக்குள் நுழைகிறது.

அறிகுறிகள்

6.. நோயுற்ற கோழிகளின் இரத்தத்தில் இந்நுண்ணுயிரி பெருக்கமடைந்து தாடி, கொண்டை, மூட்டுக்கல், சூலகம், மூளை, கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்ற உள் உறுப்புகளிலும் தங்கி விடுகிறது. இதனால் கொண்டை, தாடை மற்றும் மூட்டுக்கள் வீங்கிக் காணப்படும்.

7.. உள் உறுப்புகள் இரத்தக்கசிவு மற்றும் இரத்தச் செரிவுடன் காணப்படும். சில சமயங்களில் கழுத்து திருகிக் காணப்படும். கல்லீரல் மற்றும் மண்ணீரலில் பல இடங்களில் சிறு சிறு திசு அழிவுப் பகுதிகள் காணப்படும்.

8.. நோயுற்றா கோழிகளை நோயின் அறிகுறிகளை வைத்து கண்டறிவதோடு நோயுற்ற கோழிகளிலிருந்து இந்நுண்ணுயிரியை பிரித்தரிவதன் மூலமாக நோயினை உறுதிபடுத்தலாம்.

தடுக்கும் முறைகள்

9.. கோழிகளிடையே ஒன்றுக்கொன்று கொத்திக்கொள்வதாலும் பழக்கம் இருப்பதால் நோயுற்றா இறந்த கோழிகளிகளை மற்ற கோழிகள் கொத்தும்போது இந்நோய் பெரிதும் பரவுகிறது. எனவே நோயுற்று இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதே நோய் கட்டுப்படுத்துவதன் முக்கிய செயலாகும்.

10.. மற்ற கால்நடைகள் மற்றும் இதர கொரில்லா விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம்.

11.. இந்நோய், அழர்ச்சியில் உள்ள கோழிகளை அதிகமாக தாக்குவதால் பண்ணை பராமரிப்பு முறையை மேம்படுத்துவது மிகவும் அவசியம்.

12.. நோய் பாதித்த பண்ணைகளின் பண்ணையாளர்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேத பரிசோதனை மற்றும் நோய் அறிகுறி மூலம் நோயை கண்டறியலாம். தேவைப்படின் பல்கலைக்கழக மைய ஆய்வகம் சென்னை உதவியுடன் மாதிரி பொருட்களிலிருந்து நோயை உறுதி செய்யலாம். இதற்காக இரத்தப்பூச்சு, சுகாதார முரையில் சேகரிக்கப்பட்ட கல்லீரல், மூச்சுக்குழல், மண்ணீரல் மற்றும் நீண்ட எலும்பு போன்ற மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பலாம்.

13.. நோய்த்தாக்க வாய்ப்புள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு மருந்து கொடுப்பதன் மூலம் நோய் வராமல் தவிர்க்க முடியும். இதற்காக தற்போது சந்தையில் உள்ள நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

14.. இந்நுண்ணுயிரியின் மரபு தன்மை இடத்திற்கு இடம் மற்றும் பண்ணைக்கு பண்ணை மாறுபடுவதால் ஒவ்வொரு பண்ணையில் காணப்படும் நுண்ணுயிரியின் மரபு தன்மை அறிந்து தகுந்த நோய் தடுப்பு மருந்து அளிப்பது நல்லது. எனவே பண்ணைகளில் காணப்படும் இந்த வகை நுண்ணுயிரிக்கு ஏற்ற தன்மரபு நோய் தடுப்பு மருந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

15.. இந்நோய் உள்ள பண்ணைகளில் காணப்படும் நுண்ணுயிரிக்கு ஏற்ப தன்மரபு கோழி காலரா நோய் தடுப்பு மருந்தினை பயன்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கலாம்.

click me!