களைக்கொல்லி அடிக்காமல் விவசாயம் செய்ய முடியாது,இரசாயண உரம்,பூச்சிக்கொல்லி விஷம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற மாயையில் இருக்கும் விவசாயிகளே உங்கள் கவனத்திற்கு இதோ உயிர் இயற்கை விவசாயிகள் மஞ்சள் பயிருக்கு களையை கட்டுப்படுத்த உயிர் முடாக்காக நரிப்பயிறு விதைத்துள்ளார் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட ஊடுபயிர்களும் பயிர் செய்துள்ளார். நரிப்பயிரின் பயன்கள்
1.களையை தடுக்கிறது
2.காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து முதல் பயிரின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
3.அப்படியை மண்ணில் மக்கி எருவாகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் செய்திருக்கும் ஊடுபயிர்களால் தினசரி வருமானமும் கிடைக்கிறது.இன்னும் எத்தனையோ பலன்கள் இருக்க நிலத்தில் விஷத்தை தெளித்து,மண்ணை மலடாக்கி மக்களை மலடாக்குவதேன்.வாருங்கள் ஈரோடு மாவட்டத்தையே உயிருடன் இணைந்து விஷ உணவில்லா மாவட்டமாக்குவோம்.