உவர்ப்பு நீரில் கூட கீரை வளர்க்கலாம்?

 |  First Published Dec 15, 2016, 11:38 AM IST



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்த விவசாயி கட்டத் தேவன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கீரை செடிகளை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

இவர் 60 சென்ட் நிலத்தில் வெந்தயக்கீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பருப்பு கீரை, சிறுகீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என பல வகை கீரைகளை சாகுபடி செய்துள்ளார்.

Latest Videos

undefined

நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை இதன் பயனை அனுபவிக்க முடியும்.

வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.10 வரை விலை கிடைக்கிறது. ஒரு முறை அறுவடை செய்துவிட்டால் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அறுவடை செய்யமுடியும்.

கீரைகள் நல்ல முறையில் வளர்ந்து பலன் தரவேண்டும் என்றால் உவர்ப்பு தன்மை உள்ள நீரை பயன்படுத்தவேண்டும்.

ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. நெல், வாழை, கரும்பு என பணப்பயிர்களை பயிரிட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இவர் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறார்.

விவசாயி கட்டத்தேவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கிடைக்கும் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் காய்கறி மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்தால் பலன் கிடைக்காது. இதனால் கீரை சாகுபடியில் ஈடுபட்டேன், என்றார்.

 

click me!