விவசாயத்திற்கு யூரியா தேவையா? பதற வேண்டாம் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் இருக்கு...

 |  First Published May 16, 2018, 1:48 PM IST
Urea need for farming? Do not get frustrated



காற்றிலேயே 78% நைட்ரோஜன் (தழைசத்து) இருக்கையில் வெறும் 46% மட்டுமே தழைசத்துள்ள யூரியா தேவையில்லை.

காற்றில் உள்ள நைட்ரோஜனை மண்ணில் பிடித்து வைத்து செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதும். 

இந்த வேலையை நாட்டு மாடுகளின் சாணம், மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை செவ்வனே செய்து விடும். மண்ணின் உயிரை மீட்டுவிட்டாலே தன்னை தானே உரமேற்றிகொள்ளும் திறன் பூமிக்கு வந்துவிடும்.

மண்ணுக்கு கிடைத்த அந்த நைட்ரோஜனை ஆவியாக்கி வீணடிக்கும் நுண்ணுயிரிகளை கட்டுபடுத்தவும் வேண்டும். அந்த பணியை வேம்பு மிக சீரிய முறையில் செய்து விடும். 

வேப்பம்புன்னாக்கு/வேப்பெண்ணெய் கொண்டு போன்றவற்றை மண்ணுக்கும் பயிர்களுக்கும் அளிப்பதால் வேர்களில் தழைசத்து வீணடிப்பு தடுக்கப்படுவதோடு, பூச்சி, பூன்ஜான் வேர் அழுகல் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

இல்லை இல்லை, நான் யூரியா போட்டே தீருவேன் என்றால் கூட அதில் வேம்பு கலந்து போட்டால் மூன்றில் ஒரு பங்கு யூரியாவை மிச்சபடுத்தலாம். அதாவது மூன்று மூட்டை போடுவதற்கு பதில் இரண்டு மூட்டை யூரியாவை கொட்டி வேப்பெண்ணெய் இரண்டு லிட்டர் கலந்து பிசரி போட்டால் போதும். உங்கள் பணமும், மண்ணும், இயற்கையும் காக்கப்படும்.

பணத்தை செலவழித்து கெமிக்கல் விஷத்தை கொண்டு மண்ணையும் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுப்பதற்கு பதிலாக இயற்கை வழியில் மக்கள் நிறைய பயனடையலாம்.

click me!