குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது தேன்.
தேன் மெழுகில் இருந்து அழகு சாதனப் பொருட்களான லிப்ஸ்டிக், நக பாலிஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
வேலைக்காரத் தேனீக்கள் புழுக்களுக்கு உணவாக கொடுக்கும் அரசகூழ் எனப்படும் ராயல் ஜெல்லி, மருத்துவ குணம் உடையது. தேனீயின் விஷம் முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணி.
இப்படிப்பட்ட தேன் உற்பத்திக்கான சூழல்
தேன் பெட்டி வைத்த 8 மாதத்துக்கு பிறகு மாதம்தோறும் 2 கிலோவுக்கு குறையாமல் கிடைக்கும். ஒரு பெட்டியில் 2 கிலோ வீதம் 50 பெட்டியில் மாதம் 100 கிலோ தேன் கிடைக்கும். வெளி மார்க்கெட்டில் கிலோ விலை ரூ. 140 முதல் ரூ. 160 வரை விற்பதால் மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை கிடைக்கும். தேனீக்கள் வெளியே செல்ல முடியாத மழைக்காலம் தவிர 8 மாதத்துக்கு தேன் கிடைக்கும்.
அடையில் ராணித்தேனீ இருக்கும் வரை தேன்கூட்டம் கலையாது. ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவானால், புதிய ராணி தேனீ வெளியேறும். அதன் பின்னால் மற்ற தேனீக்கள் சென்று விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய ராணி தேனீ உருவாகும் புழுவைக் கண்டறிந்து அதை அழித்து விட வேண்டும்.
கூட்டிலுள்ள ராணி தேனீயின் ஆயுள்காலம் 2 ஆண்டு. அது வரை தேன் கிடைக்கும். அதன் ஆயுள்காலம் முடிவதற்கு முன்பே புதிய ராணி தேனீயை உருவாக்கிக் கொண்டால் தொடர்ந்து தேன் உற்பத்திக்கான சூழல் அமையும்.