மழையிலும் தக்காளி தான் சிறப்பு…

 |  First Published Nov 21, 2016, 2:44 PM IST



ஐந்து மாத தக்காளி பயிரில் மழை பெய்தபோதும் சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்து இலாபம் ஈட்டலாம்.

"3 ஏக்கரில் தோட்டம் உள்ளது. 1987-வரை திராட்சை பயிரிட்டேன். 15 ஆண்டுகளாக சப்போட்டா மரங்கள் வளர்த்தேன். எல்லாவற்றையும் அழித்து விட்டு காய்கறி பயிர் செய்கிறேன். மழை இல்லாததால் போர்வெல் வறண்டு போனது. இருக்கும் தண்ணீரை வைத்து ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்கிறேன்.

Tap to resize

Latest Videos

மூன்றாண்டுகளாக தக்காளியில் நல்ல லாபம் பார்க்கிறேன். தோட்டக்கலை துறையில் 60 கிராம் ஒட்டுரக விதை தந்தனர். ஆனால் ஒரு ஏக்கருக்கு அது போதாது என நினைத்து வெளியிலும் விதை வாங்கினேன்.

குழித்தட்டு முறையில் நாற்றங்கால் உற்பத்தி கற்றுத் தந்தனர். வெயில் அதிகமாக இருந்ததால் நாற்றுகள் இறந்துவிட்டன. மேட்டுப்பாத்தி முறையில் நாற்றுகள் தயாரித்தேன்.

நான்கு கம்பியை இழுத்துக்கட்டி 100 அடி நீளத்திற்கு கட்டுக்கம்பியை கட்டி இடையிடையே செம்புக்கம்பியை தரையில் ஊன்றி இழுத்து கட்டினேன். அதன் மேல் தக்காளி படர்ந்தது. நல்ல மழை பெய்தபோதும் தக்காளி தரையில் படராமல் கம்பிகளில் படர்ந்ததால் தப்பித்தேன்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் நல்லவிலை கிடைத்தது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து என உரிய நேரத்தில் கவனித்ததால் ஏக்கருக்கு 30 டன் தக்காளி கிடைத்தது. சரியான முறையில் விவசாயம் செய்தால் நஷ்டமில்லை" என்றார் ஆறுமுகம்.

click me!