தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு காகிதக்கூழ் மர இளம் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.சவுக்கு மரம் 3 ஆண்டுகள், மீதி பயிர்களை ஐந்தாண்டுகள் வளர்க்க வேண்டும்.
குறைந்த பட்சமாக ஒரு ஏக்கரில் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு ஏக்கரிலும் இம்மரங்களை வளர்க்கலாம். சவுக்கு மரத்திற்கு தண்ணீர் வேண்டும். மற்ற பயிர்களுக்கு ஆரம்பகட்டத்தில் தண்ணீரும் ஆண்டுக்கு 800 – 900 மி.மீ., மழையே போதும்.
எங்களிடம் பதிவு செய்த நாளில் ஒப்பந்தம் இடுகிறோம். மரம் வெட்டும் நாளன்று விற்பனை விலை அல்லது ஒப்பந்தவிலை எது அதிகமோ அதைத் தருகிறோம்.
தரமான சவுக்கு மற்றும் யூக்லிப்டஸ், குமிழ் தேக்கு, அகேசியா மான்ஜியம், சூபா புல் ரகங்கள் காகித தயாரிப்புக்கு உதவுகின்றன. விதை நாற்று ஒன்றுக்கு ரூ.2, ஒட்டுரக நாற்றுக்கு ரூ.4 வீதம் விற்கப்படுகிறது.
விவசாயிகளிடம் நாற்று கொடுத்து ஒப்பந்தமுறையில் மரமாக திரும்ப வாங்கப்படுகிறது. நாற்று நட்டபின் உரமிடுவது, களையெடுப்பது, நீர் பாய்ச்சுவது, ஊடுபயிர் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்குகிறோம்.
மரம் வெட்டும் வரை தோட்டத்திற்கு சென்று ஆலோசனை வழங்குகிறோம். தேவைப்படும் விவசாயிகளின் நிலத்திற்கு நாற்றுகளை வழங்குகிறோம்.
தமிழகத்தில் 20ஆயிரம் விவசாயிகள் பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துள்ளனர். அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சியில் பெரிய விவசாயிகள் இத்திட்டத்தில் அதிகமாக சேர்ந்துள்ளனர்.