நெல்லிற்கு நிலம் தயாரித்தல்
கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம். எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்ட வேண்டும்.
கோதுமைக்கு நிலம் தயாரித்தல்
இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.
கம்புக்கு நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மக்காச்சோளத்திற்கு நிலம் தயாரித்தல்
முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்ததை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.
கேழ்வரகுக்கு நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
சோளத்திற்கு நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.