ஒருங்கிணைந்த உர நிர்வாகம்
** பயிரிடுவதற்கு தேவையான ஊட்டசத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
** மண் வளத்தின் நிலவரம் மற்றும் மண்ணின் குறைகளை தீர்க்கக்கூடிய சிறப்பு மேலாண்மை பற்றி முடிவு செய்யவேண்டும்.
** ஊட்டச்சத்து ஆதாரங்களின் இருப்பு பற்றி அறியவேண்டும்.
** விவசாயிகளின் பொருளாதார நிலைமை, ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பெறக்கூடிய லாபம் போன்றவற்றை அறிய வேண்டும்.
** சுற்றுபுறச்சூழலை கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்
** சுற்றுப்புறத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும்
பயன்கள்
** மண்ணில் இருக்கக்கூடிய இயற்கை ஊட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.
** பயிரின் ஊட்டச்சத்து தேவையையும் இயற்கை மற்றும் செயற்கை ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்து அளிப்பையும் ஒருங்கிணைக்கிறது.
** பயிர்களுக்கு சமசீர் ஊட்டத்தை அளிக்கிறது.
** குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையிலிருந்து வரக்கூடிய எதர்மறை விளைவுகளைக் குறைக்கிறது
** மண்ணின் இயல், வேதியியல், உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
** கார்பன் வெளியீட்டால் மண், நீர், சுற்றுப்புறசூழல் சீர்குறைவதை குறைக்கிறது
** மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது
** மேற்பரப்பு நிரீனால் இழப்பு வாயு மண்டலத்திற்கு ஆவியாகும் ஊட்டச்சத்து போன்றவற்றை குறைக்கிறது.