இந்த இரண்டு நோய்களையும் தடுக்க இதுதான சரியான வழிகள்; முழு தகவலும் உள்ளே...

 
Published : Jan 26, 2018, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
இந்த இரண்டு  நோய்களையும் தடுக்க இதுதான சரியான வழிகள்; முழு தகவலும் உள்ளே...

சுருக்கம்

This two diseases make more damage

 

1.. புல் வலிப்பு நோய்

கால்நடையின் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இது ‘கோதுமைப் புற்கள்’ நோய் எனவும் அழைக்கப்படுகிறது. 

இது இளங்கன்றுகளின் பால் ஊட்டத்தைக் குறைக்கிறது. எல்லா வயது மாடுகளையும் இது தாக்குகிறது. சதைப்பற்றுள்ள. வளர்ச்சியடையாத புற்களை மேய்வதால் இந்நோய் ஏற்படுகிறது.

பொட்டாசியம் மற்றும் அலுமினியம் அதிகம் உள்ள மண்ணில் நிறைய நைட்ரஜன் உரங்கள் இடுவதால் மெக்னீசியத்தின் தேவையைக் குறைக்கலாம். வசந்த மற்றும் குளிர்க்காலங்களில் இது அதிகம் பரவுகிறது. 

இது கவனிக்காமல் விட்டால் கோமா, இறப்பு போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மாடுகளை இது போன்ற புல்வளர்ந்த இடங்களில் மேய விடலாம். 4 மாதத்திற்கும் குறைவான வயதுடையவை நோயைத் தாங்கும் சக்தியற்றவை. 

மேய்ச்சல் நிலங்களில் டோலமைட், அதிக மெக்னீசியம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த உரங்களை இடவேண்டும்.  கால்நடைத் தீவனத்திலும் எல்லாச் சத்துக்களும் சரிவிகிதமாக இருக்குமாறு தரவேண்டும்.

2.. சிவப்பு மூக்கு 

பொவைன் ரினேடிரேச்செய்புஸ் தொற்று என்று அழைக்கப்படும் இந்நோய் வைரஸால் தோற்றுவிக்கப்படுகிறது. இது தலையில் வாயுக்களை உருவாக்குகிறது. 

மேலும் பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். தடுப்பூசி கொடுக்கப்படாவிட்டால், இந்நோய் தாக்கிய கால்நடைகளைக் காப்பாற்றுவது கடினம். 

நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியைச் சினை மாடுகளுக்குக் கொடுத்தல் அவசியம். கலப்பிற்கு 30-60 நாட்கள் முன்பு இளம்பசுக்களுக்குத் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

ஐபிஆர், பிஐ3, பிவிடி போன்ற பல கலவை தடுப்பூசிகள் உள்ளன.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களை குவிக்கலாம் ஈசியா! ஒரே இடத்தில் நெல் சாகுபடி, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு பயிற்சி.! இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு.
Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!