1.. கண் புற்றுநோய்
இது கண் புருவம், கருமணி ஆகியவற்றில் கட்டி போன்று ஏற்படுகிறது. உடலின் மற்ற பாகங்களுக்கு இந்நோய் பரவுவதில்லை. எனினும், கண்ணைச் சுற்றிலும் புரை போல் வரும்.
இது நிறமிகளற்ற தோலில் மட்டுமே பாதிப்பு எற்படுத்தும். எனவே தான் கண்ணைச் சுற்றிலும் கட்டி உருவாகிறது. அதனால் இனங்களைத் தெரிவு செய்து வாங்கும் போதே கண் நன்கு கருப்பாக உள்ள கால்நடைகளைத் தேர்ந்து வாங்குதல் நலம்.
மேலும் மந்தையிலிருந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளையும் அதன் கன்றுகளையும் அகற்றுதல் நன்று. கண் புற்று நோய் 7-8 வருட வயதுடைய கால்நடைகளைத் தாக்குகிறது. 3 வயதுக்கும் குறைவான கால்நடைகளை இது அவ்வளவாகத் தாக்குவதில்லை.
கால்நடைகளின் கண்களை அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும். அறுவை சிகிச்சை, போன்ற சிகிச்சைகள் மூலம் ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். கால்நடைகளின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிகிச்சை மேற்கொள்வதை விட மந்தையிலிருந்து நீக்குவதே நல்லது.
நோய் அதிகமான மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லக்கூடாது. பெரிதான கட்டிக்கல் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடும். எனவே கவனமாகக் கையாளுதல் நன்று.
2.. இரத்தக் கழிச்சல் நோய்
இந்நோய் மிகச்சிறிய ஒரு செல் உயிரிகளால் தாக்கப்படுகிறது. இது ஒரு கன்றிலிருந்து 2 வருட வயது வரை உள்ள கன்றை அதிகம் தாக்குகிறது. மற்ற மாடுகளும் பெரிய மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது பாதிக்கப்படலாம்.
வயிற்றுப் போக்கு, வறண்ட இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மாடு தன் வால் மூலம் பின்புறத்தை அடிக்கடி அடித்துக்கொள்ளும். இது உடலின் எபிதீலியல் செல்களை அழித்துவிடுகிறது.
பல உயிரிகள் வயிற்றில் பெருகிவிடுகின்றன. நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட கால்நடை இறந்து விடலாம்.
மேய்ச்சல் நிலங்களில் ஈரம் அதிகமாக இருந்தால் இந்நொய் எளிதில் பரவும். எனவே மேய்ச்சல் நிலங்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டி தரையிலிருந்து சற்று உயரத்தில் இருக்கவேண்டும். சதைப்பற்றுள்ள பயிர்களை ஓரங்களில் வளர்க்கலாம்.
காக்சிடியோஸ்டேட் என்ற மருந்தைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். நல்ல தீவனம் உண்ணும் கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.
3.. குளம்பு சிதைவு நோய்
ஃபுளுசோபாக்டீரியம் நெக்ரோபோரம், பாக்டீரியாய்டஸ் மெலனினோஜெனிகாய் என்ற பாக்டீரியாக்கள் மூலமே இந்நோய் பரவுகிறது. இது எல்லா வயது கால்நடைகளையும் பாதித்தாலும், வயது முதிர்ந்த மாடுகளில் பாதிப்பு அதிகம். குளிர் கோடை காலங்களில் இது அதிகம் பரவுகிறது.
காலில் உள்ள ஏதேனும் புரை / புண்கள் மூலம் பாக்டீரியாக்கள் நுழைந்து விடுகின்றது. ஆரோக்கியமான நோயில் இது உட்புகுவதில்லை. எனவே குளம்புகளை அவ்வப்போது கவனித்து வெட்டிவிடவேண்டும். இது ஈரமான சாணம், சேற்றில் நன்கு தங்கி வளரும் இயல்புடையது.
திடீரென கால் முடங்கிவிடும். ஒரு கால் மட்டுமே பாதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கால் சிறிது எடை அதிகரிக்கும். 103-105 டிகிரி பாரன்ஹீட் கொண்ட சாதாரணக் காய்ச்சல் ஏற்படுகிறது. சரியாக மூடப்படாத கால் இடுக்குகள், குளம்புப் பள்ளங்கள் வழியே பாக்டீரியா உட்புகுகிறது.
சரியான சிகிச்சை அளிக்காவிடில் கால் முடக்கம் பல வாரங்கள் வரை நீடிக்கும். பென்சிலின், டெட்ராசைக்ளின், சோடியம் சல்ஃபோடிமிடின் போன்ற கிருமி நீக்கிகள் பயன்படுத்தலாம். ஜிங்க் ஊட்டம் நல்ல பலனைத் தரும். சிகிச்சையளித்த கால்நடைகள் முற்றிலும் குணமாகும் வரை உலர்ந்த தரையிலேயே இருக்கவேண்டும். 0.5 மிமி /16உடல்எடை அளவு குளோரோ டெட்ராசைக்ளின் பாத அழுகல் நோயைப் போக்கும்.