ஆடுகளுக்கான குளியல் தொட்டி மற்றும் தீவனத்தொட்டி அமைக்க இந்தமுறைதான் சிறந்தது…

 |  First Published Oct 17, 2017, 12:18 PM IST
This time it is best to set up a bathtub and feeder for goats ...



ஆடுகளுக்கான குளியல் தொட்டி

** ஆடுகளை நுண்ணுயிரிகள் தாக்கத்திலிருந்து பாதுகாக்க எஃகு இரும்புத் தகடுகளாலான குளியல் தொட்டி அல்லது செங்கல் / சிமெண்டிலான குளியல் தொட்டிகளை அவரவர் பொருளாதாரம் மற்றும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

Latest Videos

undefined

** எஃகு இரும்பிலான தகடுகளால் குளியல் தொட்டி அமைக்கும்போது இதை மண்ணில் நன்றாக பதியவைக்க வேண்டும். தொட்டியைச் சுற்றி நன்றாக மண் அணைத்தல் வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிரப்பும்போது தொட்டியின் வடிவம் மாறாமல் இருக்கும்.

** தொட்டியை பதிக்கும் இடத்தில் மண் தளர்வாகக் காணப்பட்டால், சிமெண்ட் கான்கிரீட் கொண்டு அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

** இந்த குளியல் தொட்டி கொட்டகையின் ஒரு பக்கமாக இருக்கவேண்டும்.

ஆடுகளுக்கான தீவனத்தொட்டி

** தீவனத் தொட்டி சிமெண்ட் அல்லது மரத்திலானதாகவும் இரண்டு பாகங்கள் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். தீவனம் மற்றும் உலர் தீவனம் வைப்பதற்கு இது உதவும்.

** வைக்கோல் மற்றும் உலர்தீவனத் தட்டு ஒன்றினை ஆடுகளின் தலை மட்டம் அல்லது சிறிது தலைக்கு கீழே அமைத்தல் வேண்டும்.

** தீவனத் தொட்டியினை தரையிலிருந்து 450 மீமீ முதல் 600 மீமீ உயரத்தில் தூக்கி நிறுத்தல் வேண்டும்.

** தண்ணீர் தொட்டி சிமெண்ட் அல்லது எஃகு இரும்பிலான வாளியில் செய்து சுவற்றிலிருந்து கொக்கி மூலம் தொங்க விட வேண்டும்.

** தீவனத் தொட்டி எளிதில் தூக்கிச் செல்லக்கூடியதாகவும் அமைக்கலாம். ஒரு கொட்டகையில் வைக்கப்படும் தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் அங்குள்ள ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.

click me!