** கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கினை இரண்டு பாகங்களாக தடுப்புச் சுவர் எழுப்பி பிரித்துவிட வேண்டும்.
** ஒரு பாகத்தில் கம்பளி மற்றும் கம்பளி வெட்டும் கருவிகளும் மற்றொன்றில் தீவனம் மற்றும் மருந்துகளை வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
** கம்பளி வெட்டும் அறை 6 மீ நீளம், 2.5 மீ அகலம், 3 மீ உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
** ஒரு மீட்டர் அகலம் மற்றும் 2 மீ உயரம் கொண்ட கதவு முன்புறமாக இருத்தல் வேண்டும்.
** கதவு மரச் சட்டங்களால் ஆனதாக இருக்கலாம். அறையின் நீள வாக்கில் இருபுறமும் ஒரு ஜன்னல் இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.
** இந்த அறையின் தரை சுத்தமாகவும், சமதளத்துடனும் அமைத்து அறையின் சுவரில் 1 மீ உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டுதல் வேண்டும்.
** இந்த அறை நீர்க்கசிவு மற்றும் தூசி அற்றதாக இருத்தல் வேண்டும்.
** அறையின் மூன்று பக்கங்களிலும் மூன்று ஜன்னல்கள் அமைத்தல் வேண்டும்.