சினையுற்ற ஆடுகளுக்கு ஏற்ற கொட்டகை
சினையுற்ற செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை தனித்தனியே இந்த கொட்டகையில் அடைக்கலாம். இதனை குட்டி ஈனும் அறையாக பயன்படுத்தலாம்.
இந்த கொட்டகை 1.5 மீ நீளமும், 1.2 மீ அகலமும், 3.0 மீ உயரமும் கொண்டதாகவும், தீவனம் மற்றும் வைக்கோல் வைப்பதற்கென தீவனத் தொட்டியும், தண்ணீருக்கென ஒரு தொட்டியும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
இந்த கொட்டகை ஈரமற்றதாக இருத்தல் வேண்டும். ஈரம் உறிஞ்சும் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும்.
குளிர் காலத்தில், இவ்வறைகளில் மிதமான வெப்பமூட்டிகளை பொருத்தி, பிறந்த குட்டிகளை குளிரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
குட்டிகளுக்கு ஏற்ற கொட்டகை
ஒரு கொட்டகையில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வரை 25 குட்டிகள் என்ற அளவில் வைக்கலாம்.
ஒரு பெரிய கொட்டகையில் தடுப்புகளை ஏற்படுத்தி தாயுடன் உள்ள குட்டிகள், தாயிடமிருந்து பிரித்த முதிர்ச்சி அடையாத குட்டிகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த குட்டிகள் எனத் தனித் தனியே அடைத்து வளர்க்கலாம்.
பெரிய பண்ணையாக இருத்தால் மூன்று தனிக் கொட்டகையினை அமைத்து மேற்கண்ட மூன்று விதக் குட்டிகளை தனித் தனியே பிரித்து வளர்க்கலாம்.
ஒரு கொட்டகையினுள் அதிகபட்சமாக 75 ஆடுகளுக்கு மிகாமல் வளர்க்க 7.5மீ நீளம், 4மீ அகலம் மற்றும் 3மீ உயரம் கொண்டு கொட்டகையினை அமைக்க வேண்டும்.
கொட்டகையினை அகலவாக்கில் இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில் தாயிடமிருந்து பிரிக்காத குட்டிகளையும் 2.5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில், தாயிடமிருந்து பிரித்த குட்டிகளையும் வைத்து அடைத்து வளர்க்கலாம்.