** மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
** அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
** தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும். வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
** ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல். நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
** கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
** பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும். திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
** நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது. இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
** காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
** குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
** அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
** சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது. காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
** கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
** கொட்டகையமைப்பின் அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
** கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
** கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
** அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் நல்லது.