** கிளைரிசிடியா வெளிறிய உட்பகுதியுடன் கூடிய சிறிய, இலை உதிரக்கூடிய மர ரகமாகும்
** கிளைரிசிடியா செப்பியம் பல்வேறு பருவ நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது. வருட மழை அளவு 900 மிமீக்கு அதிகமாக பெய்யும் இடங்களில் இத் தீவன மரம் நன்றாக வளரும். ஆனால் வருட மழையளவு 400 மிமீக்கு குறைவாக உள்ள பகுதிகளிலும் கிளைரிசிடியா வளரும் தன்மை உடையது
** கரிசல் மண் முதல், பாறைகள் அதிகம் கொண்ட மண்ணிலும் இந்த தீவன மரம் வளரும். மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும், மண்ணின் அதிகப்படியான ஈரப்பதத்தைத் தாங்கி கிளைரிசிடியா வளரும்
** இந்த மரம் விறகுக்கும், கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், நிழலுக்கும், நீண்ட தடிகளை உற்பத்தி செய்யவும், உயிர் வேலி அமைக்கவும், மற்ற செடிகள் தாங்கி வளர்வதற்கு பந்தல் அமைக்கவும் பயன்படுகிறது
** கிளைரிசிடியா அழகுக்காகவும், காஃபி பயிருக்கு நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது
** விதைகள் மூலமாகவும், கரணைகள் மூலமாகவும் இம்மரம் உற்பத்தி செய்யப்படுகிறது
** கிளைரிசிடியா செப்பியம் மற்றும் கிளைரிசிடியா மேக்குலேட்டா போன்ற இரண்டு கிளைரிசிடியா ரகங்கள் கிடைக்கின்றன
** கிளைரிசிடியா மேக்குலேட்டா பசுந்தாள் உரமாகப் மிகவும் பயன்படுகிறது. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் வளத்தினை கிளைரிசிடியா அதிகரிக்கிறது
** ஒவ்வொரு முறை வெட்டிய பின்பும் கிளைரிசிடியா அதிகப்படியான கிளைகளை உருவாக்கி சீக்கிரம் வளரும்
** ஒரு ஹெக்டேர் நிலத்தினை சுற்றி இம்மரத்தினை நடுவதன் மூலம் 2-2.5 ஹெக்டேர் நிலத்திற்கு தேவைப்படும் பசுந்தாள் உரத்தினைப் பெறலாம்.