சாகுபடி செய்த சூபா புல்லை எப்போது அறுவடை செய்யணும் தெரியுமா?

 |  First Published Oct 14, 2017, 12:27 PM IST
how to cultivate soofa grass



 

சூபா புல் அல்லது சௌண்டல் அல்லது கூபா புல்

Latest Videos

undefined

** பருவ நிலைக்கேற்ற பயிர் செய்யப்படும் சூபா புல் ரகங்கள் உள்ளன

** ஜூன்- ஜூலை மாதம் – ஹவாயன் ஜெயண்ட்-  (ஐவரி கோஸ்ட்), கோ 1

** மானவாரி ரகம் (செப்டம்பர்- அக்டோபர்), கே 8, ஜெயண்ட் இல்பில் – இல்பில், கோ 1

** சூபா புல்லை நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்யலாம். எனினும் முதல் அறுவடை மரத்தின் அடிப்பகுதி 3 செமீ அளவிற்கு தடிமனாகிய பின்பு அல்லது மரம் ஒரு முறை காய் வைத்து விதைகளை உற்பத்தி செய்த பின்னரே முதல் அறுவடை செய்யவேண்டும்

** முதல் அறுவடைக்குப் பின்பு 40-80 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் வளர்ச்சி மற்றும் பருவ நிலையினைப் பொருத்து அறுவடை செய்யலாம்

** வறட்சியான பகுதிகளில், மரத்தினை இரண்டு வருடம் வரை வளர விட்டு, அதன் வேர்ப்பகுதி நன்றாக ஆழமாக ஊன்றிய பின்னரே அறுவடை செய்யவேண்டும்

** மண்ணிலிருந்து 90-100 செமீ உயரம் விட்டு மரத்தை வெட்டவேண்டும்

** நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு ஹெக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினை உற்பத்தி செய்யும்

** மழை பெய்யும் நேரங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 40 டன்கள் வரை பசுந்தீவன உற்பத்தியினை மரத்தின் 2ம் வருட வயதிலிருந்து பெறலாம். மேலும் சூபா புல் மரத்தினை 100 செமீ உயரம் வரை விட்டு கவாத்து செய்யலாம்

click me!