பாராபுல்லை நீர்ப்புல் அல்லது தண்ணீர்ப் புல் அல்லது எருமைப்புல் என்று அழைப்பர்.
undefined
** ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த புல்வகைத் தீவனத்தினைப் பயிரிடலாம்
** பருவ காலங்களின்போது தண்ணீர் தேங்கும் சமவெளிகளிலும், பள்ளமான இடங்களிலும் இப்புல் ரகத்தினை வளர்க்கலாம். அதாவது நிலத்தில் தண்ணீர் தேங்குவதையும், நீண்ட நாள் வெள்ளப்பெருக்கையும் இப்புல் ரகம் தாங்கி வளரும் தன்மையுடையது
** வறண்ட அல்லது மிதமான வறண்ட நிலங்களில் இந்த புல் ரகம் வளராது
** இப்பயிர் குளிரினால் அதிகம் பாதிக்கக்கூடியது. எனவே இந்தியாவில் குளிர் அதிகமிருக்கும் பகுதிகளில் குளிர் காலத்தில் இப்பயிரில் வளர்ச்சி எதுவும் இருக்காது
** தண்ணீர் தேங்கும் மண் வகைகள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றவை
** மணல் பாங்கான மண்ணிலும்,, நீர்ப்பாசனம் போதுமானதாக இருந்தால் இந்த தீவனப்புல் ரகம் நன்கு வளரும்
** விதைப்பு செய்வதன் மூலம் இந்த தீவனப்பயிரைப் பயிரிடுவது கடினம். எனவே தண்டுகளை வெட்டி ஊன்றுவதன் மூலம் இந்த தீவனப்புல்லை பயிரிடலாம்
** தென்னிந்தியாவின் எந்த பருவ நிலையிலும் இந்த தீவனப்புல்லைப் பயிரிடலாம். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப் பொழிவு இருப்பதால் இதனை பயிர் செய்வதற்கு இந்த மாதங்கள் ஏற்றவையாகும்
** உள்நாட்டு பாரா புல் ரகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.. இந்த தீவனப்புல்லில் கலப்பின ரகங்கள் இல்லை
** மெல்லிய தண்டுகள் விதைக் கரணைகளாகப் பயன்படுகின்றன. 2-3 கணுக்கள் கொண்ட தண்டுகளை 45-60 செமீ அகலமுள்ள பார்களாக 20 செமீ இடைவெளியில் அமைத்து இக்கரணைகளை ஊன்றலாம். ஈர மண்ணில் கரணையின் இரண்டு முனைகளும் ஒட்டிக்கொண்டிருக்குமாறு வைத்து மண்ணில் ஊன்றவேண்டும்
** ஒரு ஹெக்டேர் நிலத்தில் நடுவதற்கு 800-1000 கிலோ கரணைகள் தேவைப்படும்
** இக்கரணைகளை ஊன்றி 75-80 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். பின்பு 40-45 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு வருடத்தில் 6-9 முறை இப்புல்லை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் ஒரு வருடத்திற்கு 80-100 டன்கள் தீவனப்புல் கிடைக்கும்
** இந்த தீவனப்புல்லை பசுந்தீவனமாக மாடுகளுக்கு அளிக்கலாம்
** இந்த தீவனப்புல்லை பதப்படுத்தி வைக்கோலாகவோ அல்லது சைலேஜ் எனப்படும் ஊறுகாய் புல்லாகவோ தயாரிக்க முடியாது.