பாஜ்ரா நேப்பியர் கலப்பினத்தை சாகுபடி செய்யும் எளிய முறை இதோ…

 |  First Published Oct 14, 2017, 12:07 PM IST
how to cultivate neppiyar grass



 

பாஜ்ரா நேப்பியர் கலப்பினம் புல் வகை, கலப்பின  நேப்பியர் அல்லது கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

** கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் பசும் தீவனத்தில், நேப்பியர் புல்லை விட அதிக கிளைகளும்,இலைகளும் இருப்பதுடன், வேகமாக வளரும் திறன் படைத்தது. இதனால் தரமான மற்றும் அதிக அளவிலான தீவனத்தினைப் பெற முடியும்

** இந்த பசும் தீவனத்திலுள்ள புரத அளவு 8-11%

** கோ சி என் 4 எனப்படுவது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  கலப்பின நேப்பயர் புல் ரகமாகும். இப் புல்வகைத் தீவனம் கோ 8 கம்பு  ரகத்தையும் நேப்பியர் எஃப் டி 461 ரகத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின புல்வகைத் தீவனமாக்கும்.

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் 380-400 டன்கள் கலப்பின நேப்பியர் பசும் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இத்தீவனப் பயிரில் அதிகப்படியான மென்மையான, ஈரப்பதம் அதிகம் கொண்ட கிளைகள் இருப்பதுடன், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்கும்.

** வருடம் முழுவதும் இப்பசுந்தீவனத்தை நீர்ப்பாசன வசதி இருக்கும் இடங்களில் அறுவடை செய்யலாம்

** கேகேஎம் - 1 கம்பு நேப்பியர்- வருடத்திற்கு 288 டன்கள் வரை அறுவடை செய்யப்படும் ஒரு கலப்பின புல் வகை பசுந்தீவனமாகும். இத்தீவன ரகம் தரம் உயர்ந்ததாகவும், அதிக கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகுந்ததாகவும், குறைவான ஆக்சலேட் சத்து உள்ளதாகவும் இருக்கும்

** பூசா ஜெயண்ட், என்பி 21, என்பி 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, ஐ ஜி எஃப் ஆர் ஐ 7 மற்றும் ஐ ஜி எஃப் ஆர் ஐ 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின நேப்பியர் ரகங்களாகும்

** கோ 1, கோ 2, கோ 3, கோ 4 & கேகேஎம் 1  போன்றவையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட கலப்பின நேப்பியர் ரகங்களாகும்.

** இந்த ரகங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும், வருடம் முழுவதற்கும் வளர்வதற்கு ஏற்றவை

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிட 40000 கரணைகள் தேவைப்படும்

** முதல் அறுவடை நடவு செய்து 75 – 80 நாட்கள் கழித்தும், பிறகு அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்

click me!