கினியா புல் வகை தீவனப் புல்லைப் பற்றிய முக்கிய தகவல்கள்…

 |  First Published Oct 14, 2017, 12:11 PM IST
how to cultivate kini grass



 

** கினியா புல் வகைத் தீவனம் உயரமான, முழங்குகள் அதிகமுள்ள வேகமாக வளரும், கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய பல வருட பசுந்தீவனப் பயிராகும்

Tap to resize

Latest Videos

** இதன் ரைசோம் சிறியதாக இருக்கும்

** விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ கினியா புல் பயிரிடப்படுகிறது

** இதிலுள்ள புரதத்தின் அளவு 4-14%

** ஹேமில், பிபிஜி 14, மாகுனி, ரிவர்ஸ் டேல் போன்றவை கினியா புல்லின் சில ரகங்களாகும்

** கோ 1 மற்றும் கோ 2  ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கினியாப்புல் ரகங்களாகும்

** களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது

** வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்

** விதையளவு – ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 66000 கரணைகள்

** இடைவெளி – 50 X 30 செமீ

** முதல் அறுவடை விதை முளைத்து 75-80 நாட்கள் கழித்தோ அல்லது கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்

** ஹெட்ஜ் லூசர்ன் எனப்படும் வேலி மசாலுடன் கினியா புல்லை 3;1 என்ற விகிதத்தில் பயிர் செய்து வேலி மசாலுடன் சேர்த்து தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்

click me!