பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை அமைக்கும் முறை
இனவிருத்திக்கு தேவையான பெட்டை ஆடுகளை பராமரிக்க இந்த கொட்டகை பயன்படுத்தப்படும்
60 பெட்டை ஆடுகளுக்கு மிhமல் இருக்கும் இக்கொட்டகையின் நீளம் 15 மீட்டர், அகலம் 4 மீட்டர் மற்றும் 3 மீட்டர் உயரமாகவும் இருத்தல் வேண்டும்.
க்ஷகாட்டகையின் உயரம் மூன்று மீட்டர் உயரமாகவும் செங்கற்களாலான தரையமைப்பு இருத்தல் நல்லது.
தரையானது குளிர் பிரதேசங்களில் மரத்தினாலும், அதிக மழை பெய்யும் இடங்களில் நல்ல உயரமான தரையமைப்பு வசதியும் இருத்தல் வேண்டும்.
கிடா ஆடுகளுக்கான கொட்டகை அமைக்கும் முறை
இனவிருத்திக்கு உகந்த கிடா ஆடுகளை தனித்தனி அறைகள் கொண்ட கொட்டகையில் பராமரித்தல் நல்லது.
பெரிய கொட்டகை அமைப்பில், மரப்பலகைகளாலான தடுப்பு கொண்டு தனித்தனி அறைகள் அமைக்கலாம்.