ஆட்டுக் கொட்டகையின் தரை, மேற்கூரை, வாயிற்கதவை எந்த அளவில் அமைக்க வேண்டும்?

 |  First Published Oct 17, 2017, 12:15 PM IST
At what level do the floor roof gate of the shed go



தரை

** மழை அதிகமுள்ள இடங்களில் கொட்டகையின் தரை சிறிய மரச் சட்டங்கள் அல்லது மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கலாம்.

Tap to resize

Latest Videos

** மேற்கூறிய தரை அமைக்கும் போது மரப்பலகைகளின் அகலம் 7.5 செ.மீ முதல் 10 செ.மீ மற்றும் 2.5 செ.மீ முதல் 4.செ.மீ தடிமனும் கொண்டிருத்தல் வேண்டும்.

** மரப்பலகையின் முனை வட்டமாகவும், இரண்டு மரப்பலகைகளுக்கு இடையேயான இடைவெளி 1.0 செ.மீ முதல் 1.5 செ.மீ அளவும் இருக்குமாறு அமைத்தல் வேண்டும். இதனால் ஆடுகளின் சிறுநீர் மற்றும் புழுக்கைகள் எளிதாக வெளியேற்றப்படும்.

** இந்த மரப்பலகையிலான தரைதளம், தரையிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் உயரத்தில் அமைத்தல் வேண்டும்.

** இந்த மரப்பலகையிளலான தரைத்தளத்தை ஆடுகள் எளிதில் அடைய சாய்தளம் மரப்பலகையினால் அமைக்க வேண்டும்.

** கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்பு அறை மற்றும் வேலையாட்கள் அறையின் தரை சிமெண்ட் மற்றும் செங்கல் கொண்டு அமைத்து சமதளப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூரை

** மேற்கூரை எஃகு இரும்பிலான தகடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டால் தகடுகளைக் கொண்டு அமைக்கலாம். மழை அதிக அளவு இல்லாத இடங்களில் ஓலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கலாம்.

வாயிற்கதவு

** ஒவ்வொரு கொட்டகையிலும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாயிற்கதவுகள், கொட்டகையின் நீளவாக்கில் அல்லது அகலவாக்கில் அமைத்தல் வேண்டும்.

** ஒவ்வொரு வாயிற்கதவின் அளவும் 0.8மீ அகலமூம் ஒரு மீ உயரமும் கொண்டிருத்தல் வேண்டும். இது மரக்கட்டைகளால் ஆனாதகவும், கொட்டகையின் நுழைவு வாயிலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

click me!