விதை நெல்மணிகளை சேமிக்க “பத்தாயம்” முறையில் பராமரிக்க வேண்டும்.
எப்படி செய்யணும்?
undefined
தேவையான அளவு களிமண்ணை ஊறவைத்து அதில் நெல் கருக்காய், வேப்ப இலை, நொச்சி இலை இவற்றைப் போட்டு ஊறவைத்து மிதித்து மிதித்து பிறகு தேவையான வடிவத்தில் பத்தாயம் செய்யலாம்.
இப்படி செய்யும் களத்தில் பூச்சிகள், வண்டுகள், எறும்புகள் சென்று தாக்காது. இதில் வேப்பிலை வாடை, நொச்சி இலை வாடைக்கும் எந்த பூச்சியும் வராது. அதில் உள்ள நெல் பாதுகாப்பாக இருக்கும்.
மற்றொரு முறை:
தேவையான வைக்கோலை எடுத்து பிரி (கயிறு) திரித்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் மஞ்சள், வேப்பிலை, நொச்சி, தழுதாலை இவற்றை அரைத்து அந்த தண்ணீரை தெளிக்க வேண்டும்.
களிமண்ணை ஊறவைக்க மஞ்சள், வேப்பிலை, நொச்சி, தழுதாலை இவற்றை அரைத்து எடுத்த தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். களிமண்ணை குழைத்து தேவையான இடத்தில் முதலில் பிரியை சுற்றி அதன்மேல் களிமண்ணை பூசி தேவையான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.
தொட்டி காய்ந்ததும் இதில் நெல் மணிகளை போட்டுவைத்தால் எலி, அந்து, கரையாண், வண்டு இதனிடமிருந்து பாதுகாக்கலாம்.