சின்ன வெங்காயம் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு செய்வது எப்படி?

 |  First Published Jun 30, 2017, 12:56 PM IST
How to prepare nursery on small onion cultivation?



ஒரு எக்டருக்கு நடவு செய்ய 6-7 கிலோ விதை தேவைப்படும். என்னுடைய ஒரு ஏக்கர் நிலத்திற்கு தேவையான இரண்டு கிலோ விதையை நான்கு சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.

நாற்றுகள் உற்பத்தி செய்ய மேட்டுப்பாத்திகள் அமைப்பது மிகவும் அவசியம். நன்கு புழுதிபட உழுது மூன்று அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டு பாத்திகளை அமைத்து இரண்டு கிலோ டி.ஏ.பி மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

Latest Videos

undefined

பிறகு எறும்பு, இதர பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க லின்டேன் பவுடரைப் பாத்திகளின் மேல் தூவ வேண்டும். விதைகளை அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியினை ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் மேட்டுப் பாத்திகளில் 5-7 செ.மீ இடைவெளியில் 2 செ.மீ ஆழத்தில் கோடுகள் இழுத்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக்கோல் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

பிறகு பூவாளியைக் கொண்டு காலை, மாலை என இரு வேளையும் நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். விதைத்த 8-10 நாள்களில் விதைகள் முளைத்தன. புல்போர்வையை நீக்கி 40-45 நாள்கள் வரை பராமரித்து வர வேண்டும்.

நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளைத் தாக்கி நுனியைச் கருகச் செய்தன. இதற்கு டைமெத்தோவேட் (ரோகார்) மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி என்று கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

click me!