புழுதிபட உழவு செய்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி பத்து டன் மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவில் சேர்த்து உழ வேண்டும். பிறகு 45 வயதுடைய நாற்றுக்களைப் பறித்து 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
பயிர் நட்ட மூன்றாவது நாளும், மண்ணின் தன்மைக்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். பென்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 5 மி.லி என்ற அளவில் நாற்று நடுவதற்கு இரு நாட்கள் முன்பே தெளிப்பதால் நடவு செய்து ஒரு மாதம் வரை களையைக் கட்டுப்படுத்த முடியும்.
பின்னர், ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறைக் கைத் கொத்தைக் கொண்டு களை எடுக்க வேண்டும்.பின்னர் மேலுரமாக ஒரு மூட்டை யூரியா, இரு மூட்டை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவு செய்த முப்பதாவது நாள் களை எடுத்த பின்பு அளிக்க வேண்டும்.
அறுபதாவது நாள் மேலும் ஒரு களை எடுத்து ஒரு மூட்டை யூரியா, இரு மூட்டை பொட்டாஷ் அளிக்க வேண்டும். வெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பருவத்தில் வறட்சி ஏற்பட்டால், வெங்காயம் குமிழ்பிடிப்பதும், பெருப்பதும் பாதிக்கப்படும். நடவிலிருந்து அறுவடை வரை சராசரியாக 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.