குலைநோய்  தாக்குதலை கட்டுப்படுத்து இந்த முறை மிகவும்  பயன்படும்...

 |  First Published May 28, 2018, 11:57 AM IST
This method can be very useful to control the infection.



குலைநோய்  தாக்குதலை கட்டுப்படுத்தும் உழவியல் முறை...

குலைநோய் எதிர்ப்பு ரகங்களை பயிர் செய்ய வேண்டும். 

Latest Videos

நோய் தாக்குதலைத் தாங்கும் ரகங்களான கோ 47, கோ 5,0 ஏடிடீ 36, ஏஎஸ்டீ 16, ஏஎஸ்டீ 2, 0 ஏடிடீ 39, ஏஎஸ்டீ 19, டிபிஎஸ் 3, வெள்ளை பொன்னி, ஏடிடீ 44, பிபிடி 5204, கோஆர்எச், பல்குணா, ஸ்வர்ணமுகி, சுவாதி, பிரபாட், ஐஆர் 64, ஐஆர் 36, ஜெயா ஆகியவற்றை பயிரிடலாம். 

அதிக தழைச் சத்து உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். தழைச் சத்து உரத்தை மூன்றாகப் பிரித்து இடவேண்டும். வரப்பிலிருக்கும் களைகளை அழிக்க வேண்டும்.
 
நோய் தடுப்புமுறை: 

புழுதி நாற்றங்கால்களையும் தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும். அறுவடைக்குப் பின் வைக்கோல், தூர்களை எரித்து விடவேண்டும். வரப்புகள், பாத்திகளின் மீதுள்ள புல்வகைகள், மற்ற களைகளை அழிக்க வேண்டும்.
 
சுடோமோனாஸ், புளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். 25 சதுரமீட்டர் பரப்புள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ. ஆழம் வரை நீரைச் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சுடோமோனாஸ், புளோரசன்ஸ் பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும். 

நாற்றுகளின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாள்களுக்கு பின் 10 நாள் இடைவெளியில் சுடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியை 0.5 கிராம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
 

click me!