மூலிகைப் பூச்சிவிரட்டி இப்படிதான் செயல்படுகிறது... வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 |  First Published May 26, 2018, 2:02 PM IST
Herbal pesticide works like this ...



** பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளின் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டுணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. 

** பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாயப் பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. 

Latest Videos

** இந்தப் பூச்சி விரட்டியுடன் புங்க எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கும்போது, எண்ணெய் பசை பயிரில் படிந்து இருப்பதால், எந்த ஒரு பூச்சியும் பயிரைத் தாக்காது. 

** மூக்கு வண்டு, புகையான், தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, சாறு உறுஞ்சும் பூச்சி, குருத்துப்பூச்சி போன்ற எல்லா வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். 

** பூச்சி விரட்டியானது, 80 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 20 சதம் பயிர் ஊக்கியாகவும் செயல்பட்டு, விளைச்சலை அதிகரிக்கிறது.

click me!