குலைநோய் தாக்குதல்...
நெற்பயிரை அதிகமாக தாக்கும் நோய்களில் குலைநோய் தாக்குதலும் ஒன்று.
undefined
குலைநோய் அறிகுறிகள்:
** பயிரில் உள்ள இலைகள், தண்டு, குருத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டிருக்கும்.
** இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் புள்ளிகள் காணப்படும்.
** பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளை உருவாக்கும்.
** கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர்மணிகள் சுருங்கியும், பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
** பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண்கதிர் அறிகுறி தோன்றும்.
** கதிர்ப் பருவநிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப் பருவத்துக்குப் பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும் குறைந்த தரத்துடன் காணப்படும்.
** கதிர், கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக அல்லது அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் மாறி காணப்படும்.
** சேமிப்பு நெல் விதைகள், தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் காரணி இருக்கும்.
** பூசண இனவிருத்தி அமைப்புகள், வித்துகள் மூலம் அடுத்த பருவ நெற்பயிருக்கு இந்நோயைப் பரப்பும் பூசணி வித்துகளை காற்றின் மூலம் மற்ற நெற்பயிர்களுக்கு நீண்ட தூரம் வரை பரப்பும்.