வெள்ளாடு வளர்ப்பில் இந்த வகை தீவன மேலாண்மையையும் மேற்கொள்ளலாம்... 

 |  First Published Dec 5, 2017, 1:29 PM IST
This kind of feed management can be done in goat breeding ...



இலைச் சருகுகள்

மா, பலா, மரங்களில் உதிர்ந்த சருகுகளை வெள்ளாடுகள் பல விரும்பி உண்ணும். ஆகவே இம்மரங்களின் உதிர்ந்த இலைகளை எரித்து வீணாக்கலாம், சாமானிய ஆடு வளர்ப்போருக்குக் கிடைக்குமாறு செய்வது நல்லது.

பனங்காய்

பனங்காய் சிறிதாகச் சீவப்பட்ட நுங்கும் வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகின்றன.

பலாத்தோல் மற்றும் கொட்டை

பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.

பண அடிப்படையில் தீவனத்தின் மதிப்பு

ஒவ்வொரு தானியமும் வெள்ளாட்டுத் தீவனமும் அவற்றின் விளைச்சல் அளவு, வெளியிடங்களிலிருந்து சந்தைக்கு வந்தது போன்ற காரணங்களினால், அவற்றின் விலையில் மாறுபடும். ஆனால், பண்ணையாளர்கள் தீவனங்களில் அடங்கிய புரதம் மற்றும் இதர சத்துகக்கள் அடிப்படையில் தீவனங்களுக்கு மதிப்பு அளித்துத் தீவனங்களை வாங்க வேண்டும். சந்தையில் அதிக வரத்துக் காரணமாக ஒரு சத்தான தீவனம் மலிவான விலையில் கிடைக்கலாம். 

அதே போல் சந்தை வரத்துக் குறைவு காரணமாகச் சத்து குறைந்த வேறொரு தீவனம் அதிக விலைக்கு விற்கப்படலாம். ஆகவே, சத்து அடிப்படையில் தீவனங்களை வாங்குவதே ஆதாயமான செய்கையாகும். வெள்ளாடுகளின் சுவை உணர்ச்சி மனிதர்களைப் போல் சிறப்பாக இல்லை. 

அவை இனிப்பு, புளிப்பு, உப்பு, சுவைகளை விரும்பும். கசப்புத் தன்மையை வெள்ளாடுகள் மற்ற கால்நடைகளை விட நன்கு ஏற்கும். மேலும் நம்மைப் போல் ஆடுகள் பல்வேறு சுவையை எண்ணி ஒருவிதமான தீவனத்தை மறுப்பதில்லை. இவற்றை அறிந்து ஏற்றிபடி வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டும்.

துவரை மற்றும் உளுந்துப் பொட்டு

துவரம் பருப்பு, மற்றும் உளுந்தும் பருப்பு தயாரிக்கும் ஆலைகளிலிருந்து பொட்டு உப பொருளாகக் கிடைக்கின்றது. இதில் உமியுடன், குருத்து, நொறுங்கிய பருப்புகள் இருக்கும். இதன் சிறந்த வாசனை வெள்ளாடுகளைக் கலப்புத் தீவனத்தைத் தின்னத் தூண்டும்.

click me!