வெள்ளாடுகளுக்கு வேறு மாதிரியான தீவன மேலாண்மைகளையும் மேற்கொள்ளலாம். எப்படி?

 
Published : Dec 04, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
வெள்ளாடுகளுக்கு வேறு மாதிரியான தீவன மேலாண்மைகளையும் மேற்கொள்ளலாம். எப்படி?

சுருக்கம்

Other types of feed management can also be done for goats. How?

உளுந்துச் செடி மற்றும் தட்டைப்பயிற்றுச் செடி

நெல் அறுவடைக்குப்பின், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும், உளுந்து விதைக்கப்படுகின்றது. பல இடங்களில் , உளுந்து நெற்றுகள் பிரிக்கப்பட்டு, அதன் செடிகள், நன்கு காயவைத்து வைக்கோல் போரின் இடையே சேமித்து வைக்கப்படுகின்றன. இது சிறந்த முறை, ஆனால், தஞ்சை போன்ற இடங்களில் உளுந்துச் செடி மொத்தமாகப் பிடுங்கப்பட்டு, உளுந்தைப் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடிக்கப்படுன்றது. 

இதன் காரணமாகச் சத்துமிகு இலைகள் உதிர்ந்து பொடியாகி விடுகின்றன. சுற்றுப் புறங்களில் தூசியை உண்டு பண்ணிச் சூழல் கேட்டையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே யாவரும் உளுந்து நேற்றைப் பிரித்து எடுத்துச் செடியை நன்கு காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். முக்கியக் குறிப்பு நன்கு உலர வைக்காத செடிகளில் பூஞ்சைக் காளான் தாக்குதல் ஏற்பட்டுத் தீவனத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.

மழைக்காலங்களில், புன்செய் மற்றும் மேட்டு நிலங்களில் தட்டைப் பயறு பயிரிடப்படுகின்றது. இதன் கொடியையும், பயற்றின் நெற்றைப் பிரித்தபின் காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். அத்துடன் உறுந்து, பயறு நெற்றுகளின் தோலையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.

இலைச் சருகுகள்

மா, பலா, மரங்களில் உதிர்ந்த சருகுகளை வெள்ளாடுகள் பல விரும்பி உண்ணும். ஆகவே இம்மரங்களின் உதிர்ந்த இலைகளை எரித்து வீணாக்கலாம், சாமானிய ஆடு வளர்ப்போருக்குக் கிடைக்குமாறு செய்வது நல்லது.

பனங்காய்

பனங்காய் சிறிதாகச் சீவப்பட்ட நுங்கும் வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகின்றன.

பலாத்தோல் மற்றும் கொட்டை

பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!