கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வருவதால் நிறைய மாடுகள் இறந்து விடுகின்றன.இதனால் கால்நடைகளை வளர்ப்போருக்கும், நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.அநேகமாக மாடுகளுக்கு வரும் எல்லாத் தொற்று நோய்களையும், அறவே வராமல் தடுக்க முடியும். நோய் வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பதே நல்லது.
அந்த வகையில் மாடுகளைத் தாக்கும் பசு அம்மை நோயைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பசு அம்மை நோய்:
பசு அம்மை நோய் ஒரு கொள்ளை நோய் அல்ல. ஆனால் எளிதில் பரவும் தொற்று நோய் ஆகும். அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத கறவையாளர்களுக்கும் இந்நோய் மாடுகளிலிருந்து தொற்றிக் கொள்ளும்.
அதுபோல் சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட கறவையாளர்களிடமிருந்து மாட்டுக்குத் தொற்றிக் கொள்ளும்.
அறிகுறிகள்:
காய்ச்சல் ஏற்படும், மடியிலும், காம்புகளிலும், முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.
தடுப்பு முறைகள் :
பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
** புண்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, பெரிக் ஏசிட்டை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவிட வேண்டும்.
** பாலைக் காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும்.