மாடுகளை அதிகமாகத் தாக்கும் வெக்கை நோயும், அவற்றைத் தடுக்கும் முறைகளும் இதோ...

 |  First Published Jan 8, 2018, 1:35 PM IST
Here are the methods of preventing the cows and the prevention of them.



மாடுகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் நோய்களை தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

தொற்று நோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று, தண்ணீர், நேரிடைத் தொடர்பு, அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். 

கால்நடைகளுக்கு வரும் வெக்கை நோய்,தொண்டை அடைப்பான்,கோமாரி, அம்மை நோய், சப்பை நோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தது.

அந்த வகையில் மாட்டை அதிகளவில் தாக்கும் வெக்கை நோயும், அதனைத் தடுக்கும் முறைகளும் இங்கே காணலாம்.

வெக்கை நோய்: 

வெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு மாட்டிற்கு வந்தால் மற்ற மாடுகளுக்கும் விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவிக்க வல்லது. எருமை பசுக்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. செம்மறியாடு, வெள்ளாடுகளையும் சில சமயம் தாக்கும்.

அறிகுறிகள்:

** முதலில் கடும் காய்ச்சல்(1600 F)இருக்கும்.தீனி சாப்பிடாது. வயிறு ஆரம்பத்தில் பொருமியிருக்கும்.கண்கள்,வாய்நாசி, இவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருக்கும்.உதடுகளின் உட்புறம்,ஈறுகள்,நாக்கின் அடிப்புறம் ஆகிய பகுதிகளில் புண்கள் உண்டாகும்.

** கெட்ட நாற்றத்துடன் கூடிய கழிச்சல் வெகு தூரம்வரை பீச்சியடிக்கும்.எருமைகளுக்கு மார்பு, குண்டிக்காய் ஆகிய பகுதிகளில் தோல் வெடிப்பும், இரத்தக்கசிவும் ஏற்படும்.சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.

** 7 முதல் 10 நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடும்.

தடுப்பு முறைகள்: 

** எல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. 

** கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். 

** பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம். மேலும், பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

click me!