துல்லிய பண்ணையத்தில் பாசன வசதிகளை அமைக்க இதுதான் சரியான முறை…

 |  First Published Oct 9, 2017, 12:18 PM IST
This is the right way to set up irrigation facilities in precision farming ...



துல்லிய பண்ணையத் திட்டத்தில் சொட்டுநீர் அமைப்பு மூலம் நீர் செலுத்தப்படுகின்றது. மணற்பாங்கான வண்டல் மண்ணில், 6 அடி இடைவெளியில் பக்கக் குழாய்களும், 50 செ.மீ. அல்லது 60 செ.மீ. இடைவெளியில் நீர் சொட்டிகளும் அமைக்கப்பட்டு் மணிக்கு 3.5 – 4 லிட்டர் நீர் பாய்ச்சப்படுகின்றது. இந்த 6 அடி பக்கக் குழாய் இடைவெளி வாழைக்கு மட்டுமே உகந்தது.

பக்கக் குழாய் இடைவெளி 150 செ.மீ. என அமைத்து, வாழையினை 5x7 அடி இடைவெளியில் நடலாம்.

Tap to resize

Latest Videos

வாழைக்கு அதன் ஆயுட்காலத்தில் 900-1200 லிட்டர் நீர் தேவைப்படும். வாழையின் நல்ல வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனுக்கு அதன் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் சராசரி அளவு ஈரப்பதமும், அதிகளவு நீரை வடிகட்ட முறையான வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.

சொட்டு நீர்ப் பாசன முறையில், நீரானது வேர் மண்டலத்திற்கு அருகிலேயே சிறிய அளவில் அளிக்கப்படுகிறது. வாழையின் ஒவ்வொரு பருவத்திலும் தேவைப்படும் நீரின் அளவுகள் தரப்பட்டுள்ளன.

உரப்பாசனம்

உரப்பாசனம் என்பது நீரில் கரையும் உரங்களைப் பயிர்களுக்கு பாசன நீரின் வழியே சரியான அமைப்பின் மூலம் வழங்குவதாகும். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்கள் மற்றும் பிற சத்துக்கள் துல்லியமாக தேவைப்படும் அளவில், சரியான நேரத்தில் மண்ணில் அளிக்கப்படுகின்றது. இந்தச் சத்துக்கள் பயிர் வேரினைச் சுற்றி, மிதமான அளவில் அளிக்கப்படுவதால் பயிர்கள் வேகமாக எடுத்துத் கொள்கின்றன.

உரப்பாசனக் கருவிகள்

மூன்று அடிப்படை அமைப்புகள் மூலம் நீரில் கரையும் உரங்கள் பாசன நீரினுள் செலுத்தப்படுகின்றன. அவை

வெஞ்சுரி அமைப்பு

வெஞ்சுரி மூலம் வழியும் நீரானது உரக்கரைசலை அதன் வழியே இழுத்துக் கொள்கின்றது. இம்முறையில் அழுத்தம் மற்றும் நீர் வழியும் விகிதம் அடிக்கடி மாறுவதால், இது துல்லியமாக இருப்பது இல்லை.

உரப்பாசனத் தொட்டி

60 லிட்டர், 90 லிட்டர், 120 லிட்டர் போன்ற அளவுகளில் இந்த தொட்டிகள் உரப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வால்வுகளில் அழுத்த வேறுபாடுகள் இருப்பதால், சத்துக் கரைசலை தொட்டியிலிருந்து உறிஞ்சி பாசனக் குழரய்களுக்கு அனுப்புகின்றன.

உரப்பாசன பம்ப்

இவை உரங்களை நேரடியாக சொட்டு நீர்ப் பாசனக் குழரயினுள் சீரான இடைவெளியில் அனுப்புகின்றன. சிறிய பம்புகள் குறிப்பிட்ட அளவு உரக் கரைசலை பாசனக் குழரயினுள் செலுத்துகின்றன.

click me!