துல்லிய பண்ணைய முறை பயிரிடுதலுக்கு திசு வளர்ப்பு வாழைகளைப் பயன்படுத்தவும், திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை சாதாரண இடைக்கன்று வாழைகளைக் காட்டிலும் சீரான மற்றும் வேகமான வளர்ச்சி கொண்டவை.
இவை கிட்டதட்ட 20 நாட்களுக்கு முன்பே பூப்பதோடு, 35 நாட்கள் சாதாரண வாழைகளை விட குறைந்த பயிர்க் காலம் கொண்டவை. அதோடு, அதிக மகசூல் தரக்கூடியவை.
45 முதல் 60 நாட்கள் நன்கு கடினப்படுத்தப்பட்ட குறைந்தது 30 செ.மீ. உயரமும், 5 – 6 செ.மீ. வெளித்தண்டுச் சுற்றளவும் கொண்ட கன்றுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் கன்றில் நன்கு ஒளிச்சேர்க்கை நடைபெறும் 5 இலைகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளி 5 செ.மீ. க்கு குறையாமல் இருப்பது மிக முக்கியம்.
இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் முடிவில் சுமார் 25-30 ஆணி வேர்கள் கிழங்கில் இருக்கவேண்டும்.
ஆணி வேரின் நீளம் 15 செ.மீ க்கு அதிகமாக, இரண்டாம் நிலைப் பக்க வேர்களுடன் அமைந்திருக்கவேண்டும்.
பாலித்தீன் பையானது 20 செ.மீ. நீளமும், 16 செ.மீ. விட்டமும் கொண்டதாக இருக்கவேண்டும். இந்த பையின் முக்கால் பாகத்திற்கு மண் கலவையை நிரப்பவேண்டும்.
இந்த மண் கலவையானது உலர் எடை அளவில் 750 – 800 கிராம் எடை இருக்கவேண்டும்
இலைப்புள்ளி, தண்டு அழுகல் மற்றும் வினையியல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏதுமற்று இருக்கவேண்டும்.
கன்றுகள் எர்வினியா அழுகல் நோய், நூற்புழுவினால் ஏற்படும் புள்ளிகள், வேர் முடிச்சுகள் போன்ற வேர் நோய்க்காரணிகளற்று ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கன்றுகளை வாங்குவதற்கு முன் சரி பார்த்து வாங்க வேண்டும்.
அபரிமித வளர்ச்சி பெற்றிருக்கும் கன்றுகளை தேர்வு செய்யக்கூடாது.