தென்னையில் எரு மற்றும் உரமிடுதலை செய்ய இதுதான் சரியான வழி...

Asianet News Tamil  
Published : Apr 27, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
தென்னையில் எரு மற்றும் உரமிடுதலை செய்ய இதுதான் சரியான வழி...

சுருக்கம்

This is the right way to make manure and fertilizer in coconut ...

தென்னையில் எரு மற்றும் உரம் இடுதல் :

** நெட்டை ரக தென்னைக்கு வருடத்திற்கு 1.2 கிலோ யூரியாவும், 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், 2 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரமும், 50 கிலோ தொழுஉரமும் மற்றும் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.

** வீரிய ஒட்டு ரக தென்னைக்கு வருடத்திற்கு 2.25 கிலோ யூரியாவும், 1.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.00 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ தொழுஉரம் மற்றும் 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

** மேற்குறிப்பிட்ட உர அளவுகளில் முதல் ஆண்டு 1/4 பங்கும், இரண்டாம் ஆண்டு 1/2 பங்கும், மூன்றாம் ஆண்டு வயதுள்ள கன்றுகளுக்கு 3/4 பங்கும் இட வேண்டும். மொத்த உர அளவுகளை இரு சமமாகப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி – தை மாதங்களில் இட வேண்டும்.

** மரத்தினை சுற்றிலும் எடுக்கப்பட்ட 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்தியின் மேற்பரப்பில் எருவினையும் இரசாயன உரங்களையும் இட்டு மண்வெட்டியால் பொத்தி விட்டு பின்பு நீர்பாய்ச்சவும்.

** தென்னை நுண்ணூட்ட கலவையினை ஒரு ஆண்டிற்கு 1 மரத்திற்கு 1 கிலோ வீதம் இட வேண்டும்.

** அல்லது 200 மிலி தென்னை டானிக்கினை ஒரு மரத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வேர் மூலம் கட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் குறும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.

** வட்டப்பாத்தியில் 100 கிராம் சணப்பினை விதைத்து பூக்கும் தருவாயில் அறுவடை செய்து வட்டப்பாத்தியில் இட வேண்டும்.

** இவ்வாறு ஆண்டிற்கு மூன்று முறை செய்தால் தனியாக மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம் இடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்வதால் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!