தென்னையில் இந்த சத்துகள்  குறைந்தால் கூட அவற்றை எளிதில் சரிசெய்து விடலாம்...

 |  First Published Apr 27, 2018, 11:51 AM IST
Even if the nutrients are lower in coconut they can be easily adjusted ...



1.. கால்சியம் :

** தண்டு மற்றும் இலைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. பொதுவாக இதன் குறைபாடு நெட்டை தென்னை ரகத்தில் காணப்படுவதில்லை.

Tap to resize

Latest Videos

undefined

** ஆனால் குட்டை ரக தென்னை மரங்கள் இதன் குறைபாடு தென்படுகிறது.

** தென்னையில் 14-ம் இலையில் இதன் அளவு 0.30.-0.40 விழுக்காடு இருப்பது வளர்ச்சிக்கு உகந்தது.

** தென்னை மரத்திற்கு கால்சியம் அடங்கிய உரங்களான சூப்பர் பாஸ்பேட் மற்றும் ராக்பாஸ்பேட் இடுவதன் மூலம் இதன் தேவையை பூர்த்தி செய்யலாம்.

2.. மெக்னீசியம் :

** நெட்டை இரகங்களை விட குட்டை தென்னை இரகங்கள் மெக்னீசிய பற்றாக்குறை அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது.

** பற்றாக்குறையால் அடி இலைகள் மஞ்சளாக மாறும். மர வளர்ச்சிக்கு தென்னையின் 14-வது இலையில் 0.24 விழுக்காடு மெக்னீசியம் அவசியம்.

** மெக்னீசியம் சத்து குறைபாட்டிற்கு மரம் ஒன்றுக்கு ஆண்டிற்கு 500 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.

** சமமாகப் பிரித்து ஆறு மாதத்திற்கு 250 கிராம் வீதம் இடவேண்டும்.

3.. கந்தகம் :

** தென்னை இலையில் கந்தகத்தின் அளவு 0.12 விழுக்காடு கீழே இருக்கும்பொழுது இதன் குறைபாடு மரத்தில் தென்படுகிறது.

** ஆகவே, இதன் உகந்தநிலை 0.12லிருந்து 0.19 விழுக்காடு வரை இருப்பது மர வளர்ச்சிக்கு ஏற்றது. இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் பருப்பின் அடர்த்தி குறைந்து திடமாக இருக்காது.

4.. துத்தநாகம் :

** இதன் பற்றாக்குறையால் தென்னையில் இலைகள் சிறுத்தும் உருமாறியும் தென்படும். இதன் குறைபாட்டினை தவிர்க்க ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 500 கிராம் துத்தநாக சல்பேட் இட வேண்டும்.

5.. போரான் :

** பாளையில் உற்பத்திற்கும் மகரந்தம் முளைப்பதற்கும் போரான் பெரிதும் உதவுகின்றது. இதன் பற்றாக்குறை மரத்தின் திசுவளர்ச்சியை பாதிக்கின்றது.

** மேலும் இலைகள் நீளமாக வளர்வது தடைப்பட்டு இலைகளின் நுனி மடங்கியும், “V’ வடிவத்திலும் தோன்றும். மரத்தில் குருத்து இலைகள் பிரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். தேங்காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன் கீழே விழுந்துவிடும்.

** போரான் 10லிருந்து 13பிபிஎம் வரை 14வது இலையில் இருப்பது தென்னை வளர்ச்சிக்கு உகந்ததாகும். இதன் பற்றாக்குறையை நீக்க மரம் ஒன்றிற்கு போராக்ஸ் 200 கிராம் இட வேண்டும்.

click me!