தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளும் இதோ...
1.. தழைச்சத்து :
undefined
** தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது.
** பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.
** இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் வளர்ச்சியை பாதித்து இளம் மற்றும் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகின்றன.
** தென்னையில் 14வது இலையில் இதன் அளவு 1.8-2.0 விழுக்காடு இருக்க வேண்டும்.
2.. மணிச்சத்து :
** தென்னை மரத்தின் அடித்தண்டு பருமனாவதற்கு பயன்படுகிறது.
** மண்ணில் இதன் பற்றாக்குறையால் வேர்களின் வளர்ச்சியை பாதிக்கப்படுகின்றது.
** மேலும் பூக்கள் உண்டாவதும், தேங்காய் முதிர்ச்சி அடைவதும் தாமதமாகும். தென்னை இலைகளில் மணிச்சத்து 0.12 விழுக்காடு இருக்க வேண்டும்.
3.. சாம்பல் சத்து :
** தேங்காயில் பருப்பு மற்றும் எண்ணெய்ச்சத்து உருவாகுவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
** மேலும் அதிக காய்கள் பிடிப்பதற்கும் பருப்பு தடிமனாவதற்கும் உதவுகின்றது.
** சாம்பல்சத்து மரத்திற்கு பூச்சிநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.
** இதன் பற்றாக்குறை இலையில் ஆரஞ்சு நிற புள்ளிகள் அல்லது ஒளி ஊடுருவக்கூடிய சிறு வெளிரிய மஞ்சள் புள்ளிகள் போன்று தென்படும்.
** சாம்பல் சத்து பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையில், மரத்தின் இலைகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், நுனி சிறுத்தல் போல் காணப்படும்.