நிலப்போர்வை அமைத்து விவசாயம் செய்வது எப்படினு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Apr 27, 2018, 11:44 AM IST
How to make a mutching and cultivate farming



நிலப்போர்வை அமைத்து விவசாயம் 

** கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால் அதிக மகசூல் பெற முடியும்.

Tap to resize

Latest Videos

undefined

** கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே. மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும்.

** கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை (மல்ச்சிங்) (“Mulching“) அமைக்க வேண்டும்.

** பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும்.

** பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

** மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம்.

** அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும். “மல்ச்சிங்’ முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைக்கும். 

** விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

** ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும்.

** சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர்.

** இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.    நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.

click me!