எல்லாரும் வெள்ளாடு வளர்ப்பில் இவ்வளவு ஈடுபாடு காட்ட இதுதான் காரணம்...

 |  First Published Jan 19, 2018, 1:41 PM IST
This is the reason why everyone is so engrossed in goat farming ...



மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

இன்றைக்கு மேய்ச்சல் நிலங்களில் அளவு குறைந்து, பிளாட்டுகளின் எண்ணிக்கை தறுமாறாக அதிகரித்து வருகிறது. முன்பு எல்லாம், பத்து பதினைந்து மாடுகளை வைத்திருந்தவர்கள், இப்போது ஒன்றிரண்டு மாடுகளையாவது வளர்த்து வருகிறார்கள்.

ஆடு வளர்த்தால் நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு மாட்டை வாங்கி வளர்க்க பல ஆயிரம் ரூபாய்க்களை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஆட்டினை வளர்ப்பதற்கு சில ஆயிரங்களே முதலீடு செய்தால் போதும். ஒராண்டிலேயே முதலீடு செய்த தொகைவிட பல மடங்கு லாபம் பார்க்கலாம்

வெள்ளாடுகள் வளர்ப்பதில் இன்றைய நிலை:

1.. அந்நிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளாட்டு எதிர்ப்புக் கொள்கை இன்னும் முற்றிலுமாக நீங்கவில்லை. எனினும், தற்போது கால்நடைப் பராமரிப்புத் துறைப் பண்ணைகளில், தலைச்சேரி, சமுனாபாரி வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன.

2.. மேய்ச்சல் நிலம் குறைந்து வரும் சூழ்நிலையில், செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வேளையில், வெள்ளாடுகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.
3.. நிலமற்ற ஏழைகள் எல்லா எதிர்ப்பையும் தாண்டி வெள்ளாடுகளை வளர்க்கின்றார்கள்.

4.. சாலை மரங்கள், பொது இடங்களிலுள்ள மரங்கள் தழைக்கு வெட்டப்படுகின்றன.

5.. இன்னும் பல ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு வைத்து வெள்ளாடு வளர்ப்புத் தடை செய்து கொள்கின்றார்கள். ஆனால், யாவருமே வெள்ளாட்டுக் கறியைத்தான் விரும்பிக் கேட்டு உண்பார்கள்.

7.. இச்சூழ்நிலையில் ஏழைகள் பெருமளவில் வளர்க்கும் வெள்ளாடுகள் சிறக்க வேண்டும். அதன் காரணமாக ஏழைகள் வளம் பெற வேண்டும். பெருகி வரும் வெள்ளாட்டு இறைச்சித் தேவையை ஈடுகட்டவும், அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதிக அளவில் அறிவியல் அடிப்படையில் முன்னேற்ற முறையில், வெள்ளாடுகள் வளர்க்கப்பட வேண்டும். 

8.. அதே வேளையில், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும் தழை உற்பத்திக்காக நிறைந்த அளவில் தீவன மரங்கள் எங்கும் நடப்பட வேண்டும். ஆடுகள் வளர்ச்சியால், காடுகள் பாதிக்கப்படாமல் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படும் நிலை ஏற்பட வேண்டும்.

9.. கறவை மாட்டிற்கான பராமரிப்பு செலவை விட, ஆட்டிற்கான பராமரிப்பு செலவு குறைவு.

10... ஆடுகளை வளர்ப்பதற்கு பெரிய அளவில் இடமும் தேவையில்லை. வீட்டிற்கு பக்கத்திலேயே வளர்க்கலாம். பலரும் இப்போது லாபகரமாக வளர்த்து வருகிறார்கள்.

இந்த காரணங்களால் தான் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது.  

click me!