வெள்ளாடுகளில் இருக்கும் இந்த வெளிநாட்டு இனங்கள் கூட மிகவும் புகழ்பெற்றவை...

 |  First Published Jan 19, 2018, 1:38 PM IST
These overseas breeds are also very popular among the goats ...



1.. சமுனாபாரி

இவ்வினம் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்தது. இவ்வின ஆடுகள் உயர்ந்த கால்களையும், பெரிய உடலமைப்பையும் கொண்டவை. இவை, பல்வேறு உடல் நிறத்துடன் இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த செம்மை நிறத்துடனோ, செம்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுடனோ இருக்கும். இவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னவெனின், இவை நீண்ட, பெரிய, தொங்கும் காதுகளையும், ரோமானிய மூக்கையும் கொண்டிருப்பதாகும்.

கிடாக்கள் 60 முதல் 90 கிலோ எடை இருக்கும். பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை இருக்கும். பொதுவாக, ஆண்டிற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். இரு குட்டிகள் போடுவதும் உண்டு. தினமும் சராசரியாகக் கொடுக்கும் பாலளவு 2 முதல் 3 கிலோ. சின்ன சேலம், செட்டிநாடு ஆகிய அரசுப் பண்ணைகளில் இவ்வினங்கள் வளர்க்கப்படுகின்றன.

2.. பார்பாரி 

இது சோமலாய நாட்டைச் சார்ந்தது. தற்போது உத்திரப்பிரதேசப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவ்வின ஆடுகள் குட்டையான கால்களுடன் காணப்படும். இவை பொதுவாக, வெள்ளை நிறத்துடன் இருக்கும். சிலவற்றிற்கு வெள்ளையில் செம்மை நிறப் புள்ளிகளும் உடலில் இருக்கும். 

கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையுடனும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையுடனும் இருக்கும். இந்த இன வெள்ளாடுகள் 12-15 மாத இடைவெளியில் இருமுறை குட்டி போடும். பொதுவாக இரட்டைக் குட்டி போடும். தினசரி பால் அளவு 750 கிராம்.

3.. பீட்டல் 

இவை பெரிய ஆடுகள், சராசரி பாலளவு 1 கிலோ. இவ்வினம் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தது. இந்த ஆடுகளுக்கென்று சிறப்பான நிறம் என்று ஏதும் கிடையாது. பொதுவாகக் கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் அரக்கு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். சமுனாபாரி இனம் போன்று ரோமானிய மூக்கு இவ்வினத்திற்கும் உண்டு. 

ஆனால், குட்டையான தொங்கும் காதுகள் மட்டுமே உள்ளன. பின்னோக்கித் திருகிய கொம்புகளை உடையன. கிடாக்களுக்கு மட்டும் தாடி உண்டு. கிடாக்களின் எடை 50 – 75 கிலோ; பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ. 9 மாத வயதில் இறைச்சிக்கு வெட்டலாம். எடை 16 கிலோ.

4... மார்வாரி

இந்த வெள்ளாட்டினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தது. இது நடுத்தர உடலமைப்புக் கொண்டது. இது சிறந்த இறைச்சி இனமாகும். இது கருமையான நிறம் கொண்டது. கொம்புகள் திருகி இருக்கும். தினசரி பாலளவு 0.5 கிலோ. ஆண்டிற்கு 300 கிராம் முடியும் கொடுக்கும்.

5.. பாஸ்மினா 

இவை இமாசலப்பிரதேசம் மற்றும் லடாக் பகுதியில் உள்ளன. இவை சிறியவை. இவ்வின ஆடுகளில் பாஸ்மினா கம்பளி முன்சந்துகளிலும், உடல் ஓரங்களில் மட்டும் வளரும். இலை வெள்ளை மற்றும் அரக்கு நிறமுடையவை. சாம்பல் நிறம் கொண்டவையும் உண்டு. இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல உதவுகின்றன.

Tap to resize

Latest Videos

click me!