1.. சுர்த்தி (Surti)
இவ்வினம் குஜராத்திய மாநிலத்தைச் சார்ந்தது. சிறிய இனம். தூய வெள்ளை நிறம் கொண்டது. சிறந்த பால் வழங்கும் இனம். சராசரி பாலளவு 2.5 கிலோ. ஆழ்கூள முறை வளர்ப்பிற்குச் சிறந்தது. உடல் எடை ஆண் 30 கிலோ பெண் 32 கிலோ.
2.. ஓஸ்மானாபாடி (Osmanabadi)
இது மராட்டிய மாநிலம்தைச் சார்ந்தது. பெரிய உடலமைப்புக் கொண்டது. நீண்ட கொம்புகளையும், கருமை நிறத்தையும் உடையது. சில வெள்ளையானவை. இது இறைச்சிக்கும் பாலுக்கும் ஏற்ற இனம். ஆண் எடை 34 கிலோ, பெண் எடை 32 கிலோ.
3.. தலைச்சேரி (Tellichery)
மலபாரி எனவும் அழைக்கப்படும். இது கேரள மாநிலத்தின் இனமாகும். நடுத்தர உடலமைப்புக் கொண்டது. பெரும்பாலும் வெண்மை நிறமுடையவை. பிற நிறங்களும் இவ்வினத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இரண்டு, மூன்று குட்டிகள் போடும். பாலுக்கு ஏற்ற இனம். ஆண், பெண் இரண்டிலும் சிறு கொம்புகள் உள்ளன. ஆண் எடை 39 கிலோ. பெண் எடை 31 கிலோ. புதுக்கோட்டைப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன.
4.. வங்காளக் கறுப்பு (Black Bengal)
இது வங்க மாநிலம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள இனமாகும். இது இறைச்சிக்கு சிறந்தது. அவ்வாறே அதன் தோலுக்கு பெயர் பெற்றது. பொதுவாக இரண்டு குட்டிகள் போடும்.
5.. காஷ்மீரி (Kashmiri)
இது காஷ்மீரிலும் திபேத்திலும் உள்ள இனமாகும். வெள்ளை மற்றும் கறுப்பும் வெள்ளையும் இணைந்த நிறத்துடன் காணப்படும். இந்த ஆடுகள் கடுமையான குளிரையும், தாங்க வல்லவை. இதற்காக பாஸ்பினா எனப்படும் மெல்லிய கம்பளி முடிக்கடியில் வளர்க்கின்றது.
இவை குளிர்காலத்தில் வளர்ந்து, வசந்த காலத்தில் உதிர்ந்து விடுகின்றன. இவை சீப்பு மூலம் சீவிச் சேகரிக்கப்பட்டு, உயர்ந்த கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடுகள் இறைச்சியும் வழங்குவதுடன் சுமையையும் எடுத்துச் செல்லவல்லவை.