மஞ்சள் பயிரில் நுண்ணூட்டசத்து குறைபாடு ஏற்பட இதெல்லாம்தான் காரணம்...

First Published Jul 9, 2018, 1:17 PM IST
Highlights
This is the reason for the microscopic defect in the yellow turmeric ...


மஞ்சள் பயிரில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு:

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வகையான பயிர்களிலும் நுண்ணூட்டச் சத்து (இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், குளோரின் ஆகியவை) குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றன. 

இதற்கு மிக முக்கியக் காரணங்கள்:

** நவீன விவசாய முறையில் பின்பற்றக்கூடிய தீவிர சாகுபடி முறை, 

** அதிக விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்துதல், 

** போதுமான அளவு இயற்கை உரம் அல்லது தொழுவுரம் இடாமை, 

** தொடர்ந்து பேரூட்டங்களை மட்டுமே தரக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், 

** பயிரின் வளர்ச்சி பருவம், காலநிலை மாற்றம் ஆகியவை.

இவற்றால் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்காததால் பயிரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தோன்றுகின்றன. 

click me!