கருப்பு செம்மறி ஆடு
தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு ஆடு. திருச்சி கருப்பு. மேச்சேரி. கோவை குறும்பை. நீலகிரி. ராமநாதபுரம் வெள்ளை. வெம்பூர். கீழக்கரிசல் ஆகிய எட்டு வகையான செம்மறி ஆடு இனங்கள் உள்ளன. தற்போது ஒன்பதாவதாக கச்சக்கட்டி கருப்பு செம்மறி ஆடு என்ற இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு முறை
பெரும்பாலும் இந்த ஆடுகளை வீடுகளில் வைத்து வளர்ப்பதுதான் சிறந்தது. சண்டை ஆடுகளை வீடுகளில் வைத்து வளர்க்கும்போது அது தனித்தன்மையோடு முரட்டுத்தனமாக வளரும். இந்த ஆடுகளை இனச்சேர்க்கைக்கு விடக்கூடாது.
இனச்சேர்க்கைக்கு விடும் ஆடுகளைவிட தனியாக வளர்க்கு ஆடுகள் பலம் பொருந்தியதாக இருக்கின்றன. சண்டைக்காக இல்லாமல் கறிக்காகவும், கோயில்களில் பலி கொடுக்கவும் வளர்க்கும் ஆடுகளை மந்தை ஆடுகளோடு சேர்த்து வளர்க்கலாம். வீடுகளில் சண்டைக்காக வளர்க்கும் ஆடுகளுக்கு மூன்று மாதங்கள் வரை தாய் ஆடுகளோடு வளர விடவேண்டும்.
அதற்குப் பிறகு அதைப் பிரித்து தனியாக்கிவிடவேண்டும். கரும்புப் பாகுடன் சோளமாவு கலந்து உருண்டையாகப் பிடித்து தினசரி கொடுத்து வரலாம். அதேபோல தவிடு, புண்ணாக்கு, ஆட்டுத்தீவனங்களை இணைத்துப் பிசைந்து தினசரி 200 கிராமில் இருந்து 400 கிராம் வரை கொடுக்கலாம். இதுபோல சாதாரண பசுந்தாளும் கொடுக்கவேண்டும்.
சண்டை ஆடுகளை வளர்க்க விரும்புகிறவர்கள் மூன்று மாத குட்டியில் இருந்தே வளர்க்கவேண்டும். மூன்று மாத குட்டி 3 ஆயிரம் ரூபாய்வரை விலை போகும். நல்லா வளர்ந்த ஆடு சாதாரணமாக 40 ஆயிரம் ரூபாய்வரை விற்கும். சண்டை – போட்டிகளில் வெற்றி பெற்றால் அதன் விலையே தனி, ஒரு லட்சம் ரூபாய்க்குக் கூட விற்பனையாகும்.