கால்நடைகளில் குடற்புழு நீக்கம்
குடற்புழு நீக்கம் செய்தல்:கால்நடைகளின் உணவுப்பாதையில் உள்ள அகஒட்டுண்ணிகளான நாடாப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் உருண்டைப்புழுக்கள் ஆகியவற்றை நீக்க 45 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
நாடாப்புழு தாக்குதல் இருந்தால் மட்டுமே அதற்குரிய தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். குடற்புழு நீக்க மருந்துகள் மாத்திரை மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இவற்றை வாய்வழியே நேரடியாகவோ அல்லது குடிநீரில் கலந்தோ கொடுக்கலாம்.
ஒரே விதமான குடற்புழு நீக்க மருந்தை தொடர்ந்து கொடுக்காமல், சுழற்சி முறையில் மாற்றிக் கொடுக்கவேண்டும்.
தடுப்பூசி போடும் முறைகள்: கால்நடைகளைத் தாக்கும் அநேக நச்சுயிரி நோய்கள் வந்த பின்பு கட்டுப்படுத்துவது எளிதல்ல. எனவே நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காத்தலே சிறந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு தடுப்பூசி நோய்கள் போடப்படுகிறது.
1.குடிநீரின் மூலம் வழங்குதல்
2.கண், மூக்கு துவாரங்கள் வழியே மருந்து செலுத்துதல்
3.தோலுக்கு அடியில் ஊசி மூலம் மருந்து செலுத்துதல்
4.சதையில் ஊசி மூலம் மருந்து செலுத்துதல்
5.இறக்கை சவ்வு மற்றும் இறக்கையை நீக்கி தடுப்பூசி போடுதல்
தடுப்பூசி போடும் பொழுது உயிருள்ள நுண்ணுயிர்கள் கொண்ட தடுப்பூசி மற்றும் அழிக்கப்பட்ட நுண்ணுயிரிகள் கொண்ட தடுப்பூசி ஆகியவற்றை ஒரே நாளில் வெவ்வேறு நபர்களைக் கொண்டு போட வேண்டும்.