அதிக காய்கறி விளைச்சலுக்கும், தரத்திற்கும் நேர்த்தியான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.
வீரிய ஒட்டு காய்கறி விதைகள் அதிக விலையில் விற்கப்படுவதால் மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் போடுவதால் விதைகள் ஒவ்வொன்றுக்கும் போதிய இடைவெளி இல்லாததால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து திடமான மற்றும் வளமான நாற்றாக வளர இயலாது.
undefined
இதே போல் மண்ணிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமியால் வேர் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் நாற்றங்காலில் வளர்க்கப்படும் நாற்றுகள் தரமான, வீரியமிக்க, நோய் தாக்கப்படாத நாற்றுகளாக உற்பத்தி செய்வது கடினமாக இருக்கும்.
எனவே வீரிய ஒட்டு காய்கறி விதைகளை தனித்தனியாக குழித்தட்டு பிளாஸ்டிக் அட்டையில் விதைத்து நிழல்வலை (Shade net) கூடங்களில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.
குழித்தட்டுகள் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்ய தேவையானவை வளர் ஊடகம், குழித்தட்டு மற்றும் நிழல்வலைக்கூடம்.
பொதுவாக 98 குழிகள் கொண்ட குழித்தட்டுகள் காய்கறி நாற்றுகள் உற்பத்திக்கு ஏற்றவை. இக்குழித்தட்டுகள் எடை குறைவாகவும், எளிதில் விளையும் தன்மையும் கொண்டிருப்பதால் இதனைக் கையாள்வது எளிது.
மக்கிய தென்னை நார்க்கழிவு வளர் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கழிவுகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இக்கழிவுகள் ஈரமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு எக்டர் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கு 300 கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1 கிலோ அசோஸ்பைரில்லம், 1 கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை நன்கு கலந்து 98 குழி கொண்ட குழித்தட்டு ஒன்றுக்கு இவ்வளர் ஊடகம் 1200 கிராம் இட வேண்டும்.
இரும்புக் குழாய்கள் (GF Pores) 50 விழுக்காடு நிழல் தரும் நிழல்வலையை (Shade net) கொண்டு நிழல்வலைக் கூடம் அமைக்க வேண்டும்.
இக்கூடத்தின் மேற்புறம் மற்றும் அதனைச் சுற்றியும் பூச்சிகள் உட்புக முடியாதபடி வலைகொண்டு மூட வேண்டும்.
வீரிய ஒட்டு காய்கறி விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லத்தில் நன்கு கலக்கி விதை நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.