பனை வளர்த்தால் பணம் செழிக்கும். எப்படி?

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பனை வளர்த்தால் பணம் செழிக்கும். எப்படி?

சுருக்கம்

ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ அளவுக்கு கிடைக்கும்.

தென்னை மரத்தோட ஒப்பிட்டா பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு.
பனங் கருப்பட்டி தான் கிராம மக்களுக்கு ஏற்றது என்று பொருளாதார மேதைகள் தெரிவிக்கின்றனர்.

பனங்கருப்பட்டியும் பனங்கற்கண்டும் சாப்பிட்டால் வாத, பித்தம் நீங்கும். பசியைத் துாண்டும். புஷ்டிதரும்னு ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்குது.

தொண்டைப்புண், வலி மற்றும் சளி பிரச்னைக்கு பனங்கற்கண்டு பால் நல்ல மருந்தாகும்.
பஞ்சுமில், நிலக்கரி சுரங்கம் மாதிரியான இடத்துல வேலை செய்பவர்களுக்கும் வாகனம் அதிகமா இருக்குற நகர பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னை இருக்கும்.

இதைத் தடுக்கக்கூடிய வல்லமை பனங்கருப்பட்டிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!