எண்ணெய் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க வேண்டும் என்றால் நன்றாக உலர வைத்தாலே போதும்.
விவசாயிகள் பயிர் அறுவடைக்குப் பின் விதைகளை வெயிலில் காயவைத்து சேமித்து வைத்து அடுத்த பருவத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
undefined
இந்த முறையில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகளின் முளைப்புத் திறனை விட மணிலாவின் முளைப்புத் திறன் குறைந்து காணப்படுகிறது.
எண்ணெய் பயிர் வித்துகளின் விதைகளை தேவைக்கு அதிகமாக வெயிலில் காய வைப்பதாலும், அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் சேமித்து வைப்பதாலும் முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது.
அதோடு ஈரப்பதம் அதிகரிப்பால், பூச்சிகள், பூஞ்சாண நோய் தாக்குதலால் பயிர் இழப்பு, உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுகிறது.
எனவே, எண்ணெய் பயிர் வித்துகளை சேமித்து வைக்கும் விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் 9 சதவீத ஈரப்பதத்துக்கு குறையாமல் பாதுகாக்கலாம்.
இந்த நடைமுறைகளை கடைப்பிடித்து எண்ணெய் வித்துகளின் விதைகளை பாதுகாப்பதோடு அவற்றின் முளைப்புத் திறன் சரியாக உள்ளதா என்பதையும் அறிந்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம்.