1.. செஞ்சிலந்தி:
இப் பூச்சி கண்ணுக்குத் தெரியாது. தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இப்பூச்சி தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சி தாக்குதலால் உண்டாகும் நோயை முரணை நோய் என்பர். இந்நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும்.
இப் பூச்சியைக் கட்டுப்படுத்த டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி. வீதம் கலந்து ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்தும் தெளிக்கலாம்.
2.. காய்துளைப்பான் (புரோட்டானிய புழு):
இவ்வகை பூச்சி தாக்கினால் காய், தண்டு ஆகியவற்றில் புழுக்கள் துளையிடும். ஆரம்ப நிலையாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய்ப் பூச்சிகளை அழிக்கலாம்.
அதேபோல், ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும் அழிக்கலாம். இப்பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும்.
டிரைக்கோ கிராமா கைலோனா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் மிளகாய் செடிக்கு அருகில் உளுந்து செடி, பாசிப் பயிறு செடி நட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும்.