மிளகாயைத் தாக்கும் பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும் இதோ...

 |  First Published Jun 5, 2018, 11:24 AM IST
Here are the ways to control pesticides and control them.



மிளகாய் செடியைப் பொருத்தவரை வளரும் பருவம், பூக்கும் பருவம், காய் விடும் பருவம் என மூன்று பருவத்திலும் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான தடுப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மிளகாயில் பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் என்ற மூன்று வகையான மிளகாய் உள்ளது. உணவில் காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய்தான் காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

Latest Videos

undefined

பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிர் செய்யப்படுகிறது. மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால், பூ நன்றாக விடும். அதேபோல் துளிரும் நன்றாக வரும். நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கிடைக்கும்.

மிளகாயை தாக்கும் முக்கிய பூச்சிகள்...

1.. இலைப்பேன்: 

இது, இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சியில் தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும். 

அதிகம் இலைப்பேன் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. டைமீட்டோடேட் 30 இ.சி என்ற மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.

2.. அசு உணி: 

அசு உணி என்ற பூச்சி சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. செடிகளில் கருப்பாகப் படிந்திருக்கும். சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும். 

இந்த பூச்சி தாக்கினால் “மொசைக்’ என்ற நோய் உருவாகும். இதனால், இலைகள் சுருங்கும். இந் நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில் 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம் நட வேண்டும்.

click me!